உயரம் தாண்டுதலில் மாநில அளவில் முதலிடம் கடலூர் அரசு பள்ளி மாணவி தேசியப் போட்டிக்குத் தேர்வு
4 Nov 2026, 11:36 pm

உயரம் தாண்டுதலில் மாநில அளவில் முதலிடம் கடலூர் அரசு பள்ளி மாணவி தேசியப் போட்டிக்குத் தேர்வு

உயரம் தாண்டுதலில் மாநில அளவில் சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு

பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.

கடலூர், நவ.4 -கடலூர் வேணுகோபாலபுரம் ஸ்ரீ வரதம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதா, மாநில அளவிலான தடகளப் போட்டியில் 17 வயதுக்குட்பட்டோருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் 1.53 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்தார். இதன்மூலம், நவம்பர் 13-ம் தேதி அரியானாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவியான நிவேதா மாநில அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கும், கடலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு கிரீடம் அணி வித்து, பூங்கொத்து வழங்கி, பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.