தீக்கதிர் செய்தியின் எதிரொலி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறைகள் சீரமைப்பு
22 Jul 2026, 11:39 pm
<p><strong>தீக்கதிர் செய்தியின் எதிரொலி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறைகள் சீரமைப்பு</strong></p><p>சிதம்பரம், ஜூலை 22- சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் செயல்பட்டு வரும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் புறநோயாளிகள் பிரிவில் இருந்த கழிவறைகள் போதிய பரா மரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து சிதம்பரம் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்ட மைப்பு நிர்வாகிகளின் கருத்துகளுடன் கடந்த ஜூலை 15-ஆம் தேதி ‘தீக்கதிர்’ நாளி தழில் படங்களுடன் செய்தி வெளியிடப் பட்டது. இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் கவனம் பெற்றது. இதன் எதிரொலியாக, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாஸ்கர் மற்றும் முதுநிலை குடிமைப் பணி மருத்து வர் பாரி ஆகியோர் உடனடி யாக நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்படி, கடந்த ஒரு வார மாகப்பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த கழிவறையின் பழைய டைல்ஸ்கள் மற்றும் தரைத்தளம் முழுமை யாக அகற்றப்பட்டு, புதியதாக மாற்றி சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரத்த வங்கி, மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் இருந்த கழிவறைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. இதனை அறிந்த நோயாளிகளும் அவர்களது உதவி யாளர்களும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்குத் தங்களது நன்றியைத் தெரிவித்தனர். இதுகுறித்து சிதம்பரம் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.என். பன்னீர்செல்வம், செயலாளர் என். கலியமூர்த்தி, பொருளாளர் ஆர். ராகவேந்திரன், துணைத் தலைவர் சிதம்பரநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயாளிகளின் நலன் கருதி தாங்கள் சுட்டிக்காட்டிய குறையை உடனடியாகச் சரிசெய்த மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கும், இப்பிரச்சினையை வெளிக்கொண்டு வந்து செய்தியாக வெளியிட்ட ‘தீக்கதி ருக்கும்’ நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கழிவறைகளைப் பயன்படுத்தும்போது அவற்றைச் சுத்த மாக வைத்திருக்க உதவ வேண்டும் என்றும், ஒரு நாளைக்கு 1000-த்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இவ்விடத்தில் அசுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். “கழி வறையைச் சுத்தம் செய்பவரும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்தான்” என்பதை நினைத்துப் பார்த்துப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p>
