தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவலம் நோயாளிகள் வேதனை

15 Jul 2026, 1:24 am
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவலம்  நோயாளிகள் வேதனை
<p><strong>கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவலம் நோயாளிகள் வேதனை</strong></p><p>சிதம்பரம், ஜூலை 14– சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் செயல்பட்டு வரும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யின் புறநோயாளிகள் பிரிவில் உள்ள கழிவறைகள், போதிய பராமரிப்பின்றி மிக வும் மோசமான நிலையில் இருப்பதாக நோயாளிகளும் அவர்களது உதவியா ளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர். இம்மருத்துவமனைக்குச் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டு மின்றி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் 1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வரு கின்றனர். ஆனால், புறநோயாளிகள் பிரிவில் உள்ள கழிவறைகள் சுகாதாரமற்ற நிலை யில் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. கழிவறைகளில் இருந்து வீசும் கடுமையான துர்நாற்றத்தால் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்ப தாகவும், இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவதாகவும் நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அனைத்திந்திய குடியிருப் போர் நலச்சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம் மற்றும் செயலாளர் கலிமூர்த்தி கூறுகையில், “நோயைக் குணப்படுத்தும் மருத்துவமனையிலேயே நோய்த்தொற்று ஏற்படும் அபாயகரமான சூழல் உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான கழிவறைகள் இன்னும் மோசமான நிலையில் இருப்ப தாகப் பெண் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள் தெரிவிக்கின்ற னர். எனவே, மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, கழிவறைகளைச் சுத்தம் செய்து முறையாகப் பராமரிக்கத் தேவையான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலி யுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.