1,133 பெண் குழந்தைகளுக்கு ரூ.2.84 கோடி வைப்புத் தொகை
10 Aug 2026, 11:56 pm

1,133 பெண் குழந்தைகளுக்கு ரூ.2.84 கோடி வைப்புத் தொகை

கடலூர், ஆக. 10-கடலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 787 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்தில் பெற்றோரில் ஒருவர் குடும்பநல அறுவைசிகிச்சை செய்து கொண்டால்

ரூ.50,000 வைப்புத் தொகையும், இரண்டு பெண் குழந்தை கள் உள்ள குடும்பத்தில் தலா ரூ.25,000 வைப்புத் தொகை யும் வழங்கப்படுகிறது.

2025-26ஆம் ஆண்டில் 1,133 குழந்தைகளின் பெயரில் மொத்தம் ரூ.2 கோடியே 84 லட்சம் வைப்புத் தொகை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.