தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆலைக்கழிவு நீர் கெடிலம் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் குடியிருப்போர் நலச்சங்கங்கள் முடிவு

4 Nov 2026, 11:35 pm
ஆலைக்கழிவு நீர் கெடிலம் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் குடியிருப்போர் நலச்சங்கங்கள் முடிவு

ஆலைக்கழிவு நீர் கெடிலம் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் குடியிருப்போர் நலச்சங்கங்கள் முடிவு

கடலூர், நவ. 4 -நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக் கழிவு நீர் கெடிலம் ஆற்றில் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி, மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவது என கடலூர் அனைத்து குடி யிருப்போர் நலச்சங்கங்க ளின் கூட்டமைப்பு தீர்மா னித்துள்ளது.

கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வரதராஜன் நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடை பெற்றது. தலைவர் பாலு பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்புத் தலைவர் எம்.மருத வாணன், பொருளாளர் வெங்கட்ரமணி, பொதுச் செயலாளர் பி. வெங்கடே சன் ஆகியோர் பேசினர்.

தீர்மானங்கள்

கெடிலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும். மஞ்சக்குப்பம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் வணிக நோக்கில் தோண்டப்பட்டு, மழைநீர் தேங்கியுள்ள ஆபத்தான பள்ளங்களை உடனடியாக மூடி, மைதானத்தைச் சமன்படுத்தி திறந்தவெளி மைதானமாகப் பராமரிக்க வேண்டும்.

கடலூரில் அதிகரித்து வரும் காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசைக் கண்காணிக்க காற்றுப் பரிசோதனை நிலையம், குடிநீர்ப் பரிசோதனை நிலையம் அமைக்க வேண்டும். கெடிலம் ஆற்றின் இருபுற மும் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் கருப்பு நிறத்தில் வரும் நிலத்தடி நீரைச் சீரமைக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

மேலும், கெடிலம், தென்பெண்ணையாறு ஆகிய ஆறுகளில் குப்பை கள் மற்றும் சிப்காட் கழிவுநீர் கொட்டப்படுவதைத் தடுக்க வும், ஆறுகளின் நடுவே வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி நீர் கடத்தும் திறனை அதி கரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கோரிக்கைகளை வலி யுறுத்தி, நவம்பர் 28-ம் தேதி சாவடி முதல் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வரை மனிதசங்கிலிப் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தின் முடிவில் துணைத் தலைவர் செல்வ ராஜ் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.