முந்தய பக்கம்

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த கூட்டம்

22 Jun 2026, 1:27 am
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த கூட்டம்
<p><strong>கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த கூட்டம்</strong></p><p>கடலூர், ஜூன் 21- 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடந்த 14-ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைந் ததை அடுத்து, கடலூர் துறைமுகத்திலிருந்து விசைப்படகுகளில் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் கிளிச்சை, சங்கரா, பாறை, வஞ்ச ரம், கனவா, வவ்வா உள்ளிட்ட மீன்களுடன் கரை திரும்பினர். ஞாயிற்றுக்கிழமை என்ப தால், காலை முதலே கடலூர் மீன்பிடி துறை முகத்தில் வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டிப்போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். விலை நிலவரம் குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், ஒரு கிலோ கிளிச்சை ரூ.70, காணாங்கெளுத்தி மற்றும் நெத்திலி ரூ.250, சங்கரா ரூ.450, பாறை ரூ.600, இறால் ரூ.700, வஞ்சிரம் ரூ.600 முதல் ரூ.1200 வரை விற்பனை யானதாகத் தெரிவித்தார். இதன் காரண மாக நீண்ட நாட்களுக்குப் பிறகு கடலூர் துறைமுகப் பகுதி பரபரப்புடன் காணப் பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram