தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட வரைவுக்கு எதிர்ப்பு கடலூரில் மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

29 Sept 2026, 11:57 pm
புதிய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட வரைவுக்கு எதிர்ப்பு கடலூரில் மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட வரைவுக்கு எதிர்ப்பு கடலூரில் மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், செப்.29-புதிய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட வரைவைக் கண்டித்தும், பாரம்பரிய மீன வர்களின் வாழ்வாதாரம் மற்றும் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளர் சங்கம், சிஐடியு கடலூர் மாவட்ட மீன்பிடித் தொழி லாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.பாலு தலைமை தாங்கினார்.

பாரம்பரிய மீனவர்களுக்கு விதிக்கப்படும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலான அபராதங்களை ரத்து செய்ய வேண்டும். படகுகளில் குறியீட்டு எண், ஆதார் இணைப்பு, செயற்கைக்கோள் கண்காணிப்பு, தானி யங்கி அடையாளக் கருவி உள்ளிட்ட கட்டாய கண்காணிப்பு விதிகளை கைவிட வேண்டும். மேலும், நீலப் பொருளாதாரம், சாகர்மாலா திட்டங்களால் மீனவர்களின் வாழ்விடங்களும் மீன்பிடி உரிமைகளும் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். 24 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள ரூ.25 ஆயிரம் விண்ணப்பக் கட்டணம் மற்றும் கடுமை யான நிபந்தனைகளை நீக்க வேண்டும்.

சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி, சோனாங்குப்பம், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி உரிமையை உறுதி செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். மாநில உதவிப் பொதுச் செயலாளர் கே.திரு செல்வம், சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், மீன்பிடித் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜி.சுந்தரமூர்த்தி, நிர்வாகிகள் அல்லிமுத்து, ஆறுமுகம், ஆனந்தன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.