தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க எதிர்ப்பு கடலூரில் மீன்பிடி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

10 Jul 2026, 9:53 pm
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு  அனுமதி வழங்க எதிர்ப்பு கடலூரில் மீன்பிடி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க எதிர்ப்பு கடலூரில் மீன்பிடி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கடலூர், ஜூலை 10- கடலூர் அருகே பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறு கள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு சிஐடியு மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலில் 18.7 கி.மீ தொலைவில் ரூ.425 கோடி மதிப்பீட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இத்திட்டத்தால் கடல் வளம் மாசுபடுவ தோடு, லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீர்குலையும் அபாயம் உள்ளதாகப் போராட்டக்காரர்கள் எச்சரித்தனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.பாலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கடல் வளத்தைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிக்கும் இத்திட்டத்தை அரசு நிராகரிக்க வலி யுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், செயலாளர் டி.பழனிவேல், மீன்பிடி சங்க மாநிலச் செயலாளர் சி.ஆர்.வி. ஜீவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான மீனவத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். &quot;கடலைக் காப்போம், மீனவர் வாழ்வைப் பாதுகாப்போம்&quot; என முழக்கமிட்ட அவர்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இத்திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.