தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடலூரில் நிலப் பட்டா கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம்!

5 Jun 2026, 3:22 am
கடலூரில் நிலப் பட்டா கோரி விவசாயிகள்  ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம்!
<p><strong>கடலூரில் நிலப் பட்டா கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம்!</strong></p><p>கடலூர், ஜூன் 4- கடலூரில் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டமும் ஆர்ப்பாட் டமும் நடைபெற்றது. கடலூர் வட்டம், கொடுக்கல்பாளை யம் ஊராட்சிக்கு உட்பட்ட மலையடி குப்பம், பெத்தாங்குப்பம், கீரப்பாளை யம் மற்றும் காட்டாறச்சாவடி ஆகிய கிராமங்களில் கடந்த ஐந்து தலைமுறை களாக பொதுமக்கள் அரசு தரிசு நிலத்தில் பயிர் செய்தும், வீடுகள் கட்டி யும் குடியிருந்து வருகின்றனர். இந்த விவசாயிகளின் அனுபவ நிலங்க ளுக்கு நிலப் பட்டாவும், அவர்கள் குடி யிருக்கும் இடங்களுக்கு வீட்டு மனைப் பட்டாவும் வழங்க வேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. மேலும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் விளைநிலங்களை அழித்து காலனி தொழிற்சாலை அமைக்க எடுக்கப்பட்ட விவசாய விரோத நடவடி க்கையை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து சுற்றுச்சூழல் மாசிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதோடு, கடலூர் நகரத்தின் மிக முக்கியக் குடிநீர் ஆதார மாக விளங்கி வரும் கேப்பர் மலையைப் பாதுகாக்க அரசும், மாவட்ட நிர்வாக மும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதி யாக விவசாயிகள் திரண்டு ஊர்வல மாகச் சென்ற போது, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து, கடலூர் கோட்டா ட்சியர் சுந்தரராஜன் போராட்டம் நடை பெற்ற இடத்திற்கு நேரில் வந்து விவ சாயிகளின் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். மேலும், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். மனு அளித்ததைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு விவசாய சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் எஸ். தட்சிணா மூர்த்தி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், மாவட்டச் செய லாளர் ஆர்.கே. சரவணன், துணைத் தலைவர் ஜே. ராஜேஷ் கண்ணன் சிபிஎம் மாநகரச் செயலாளர் ஆர். அமர்நாத், ஒன்றியச் செயலாளர் பஞ்சாட்சரம் மற்றும் நெல்லிக்குப்பம் செயலாளர் ஸ்ரீபன் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் தவிச மாவட்டப் பொரு ளாளர் கிருஷ்ணன், ஒன்றியத் தலைவர் அய்யாதுரை உள்ளிட்ட ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் திர ளாகக் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.