சென்னை விரைவு செய்திகள்
13 hours before

சென்னை விரைவு செய்திகள்

750 மாணவர்களுக்கு ரூ.11.56 கோடி கடனுதவி

கடலூர், அக்.31-கடலூரில் நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் முகாமில் 750 மாணவர்களுக்கு ரூ.11.56 கோடி கல்விக்கடனை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.

மஞ்சக்குப்பம் புனித வளனார் கலைக் கல்லூ ரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் இம்முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சுந்தர ராஜன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சாந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வெங்கடேசன், மகளிர் திட்ட அலுவலர் அரவிந்த், முதன்மைக் கல்வி அலுவலர் மகாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வளர்ச்சி பணிகள்ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி, அக்.31-கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா சனிக்கிழமை (அக்.31) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறிய தாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக் குறிச்சி, சங்கராபுரம், ரிஷி வந்தியம், திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய ஐந்து ஒன்றி யங்களிலும் 54 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் "வெற்றி பள்ளிகள்" திட்டத்தின் மூலமாக சுமார் 900 மாணவ, மாணவி யர்களுக்கு ஜே.இ.இ., நீட், சி.யு.இ.டி. பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர்.மு.செ.அருணா, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.