மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டித் தொடர் தொடக்கம்!
24 May 2026, 2:11 am
<p><strong>மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டித் தொடர் தொடக்கம்! </strong></p><p>கடலூர், மே 23- கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டித் தொடர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டித் தொடரைக் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். இத்தொடரில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 16 முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. போட்டிகள் அனைத்தும் தினசரி காலை 8:30 மணிக்கும், மதியம் 12:30 மணிக்கும் என இரு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. இப்போட்டித் தொடர் வருகிற மே 30-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறவுள்ளது. தொடக்க விழாவில் கிரிக்கெட் பயிற்சியாளர்கள் மோகன், சிதம்பரம், பாபு, மகேந்திரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளைக் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளர் கூத்தரசன் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார்.</p>
