மீனவப் பயனாளிகளுக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
12 Mar 2026, 4:20 pm
<p><strong>மீனவப் பயனாளிகளுக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்</strong></p>
<p>கடலூர், மார்ச் 12- கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 131 பயனாளிகளுக்கு ரூ.44.93 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி களை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, நாட்டுப் படகு எந்திரங்களுக்கான மானியத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.8.4 லட்சம் மதிப்பிலான எந்திரங்கள் வழங்கப்பட்டன. இதில் மகளிரின் பெயரில் பதிவு செய்யப் பட்ட படகுகளுக்கு 60 விழுக்காடு மானிய மும், பொதுப் பிரிவினருக்கு 40 விழுக்காடு மானியமும் வழங்கப்பட்டது. மேலும், ‘அலைகள்’ திட்டத்தின் கீழ் 118 மீனவ மகளிர் கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.29.5 லட்சம் நுண் கடன் வழங்கப்பட்டது. அத்துடன் ‘வெண் அலைகள்’ என்ற புதிய செயலி வாயிலாக நுண் கடன் வழங்கும் திட்டத்தையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதைத் தவிர, 40 விழுக்காடு மானி யத்தில் 2 மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பி லான மீன்பிடி உபகரணங்கள் மற்றும் உயி ரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.2.02 இலட்சம் நிவாரணத் தொகை ஆகிய வையும் வழங்கப்பட்டன. மீனவர்கள் இத்தகைய அரசுத் திட்டங்களை அறிந்து பயனடைய ஏதுவாக ஆட்சியர் அலு வலகத்தில் விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
