தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில்வே சாலைப் பணியால் பொதுவழி, வடிகால் பாதிக்கக் கூடாது ஆர்.டி.ஓ.விடம் சிபிஎம் தலைமையில் மனு

17 Jul 2026, 12:24 am
ரயில்வே சாலைப் பணியால் பொதுவழி,  வடிகால் பாதிக்கக் கூடாது ஆர்.டி.ஓ.விடம் சிபிஎம் தலைமையில் மனு
<p><strong>ரயில்வே சாலைப் பணியால் பொதுவழி, வடிகால் பாதிக்கக் கூடாது ஆர்.டி.ஓ.விடம் சிபிஎம் தலைமையில் மனு</strong></p><p>கடலூர், ஜூலை 16– கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகர் பகுதியில் அமைக்கப்படவுள்ள புதிய ரயில்வே சாலைப் பணியால், தங்களது பொதுவழி மற்றும் மழைநீர் வடிகால் பாதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி மக்கள் ஆர்.டி.ஓ.விடம் வியாழக்கிழமை மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே நிலம் வழியாகச் செல்லும் பாதைதான், சுமார் 100 குடும்பங்கள் வசிக்கும் இந்திரா நகர் பகுதிக்கான ஒரே பொதுவழியாக உள்ளது. இதற்கு மாற்று வழி ஏதுமில்லை. மேலும், தற்போதுள்ள பாதை வழியாகவே மழைநீர் வெளி யேறுவதால், சாலையின் உயரத்தை அதிகரித்தால் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ரயில்வே, வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பொது வழியைப் பாதுகாப்பதோடு, சாலையை அமைக்கும்போது போதுமான வடிகால் மற்றும் கல்வெட்டுகள் அமைத்த பிறகே பணி களைத் தொடங்க வேண்டும். ரயில்வே வளர்ச்சியை நாங்கள் எதிர்க்கவில்லை; ஆனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் சாலை அமைய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கீரான், சுப்பராயில் நகர் கிளைச் செயலாளர் சேட்டு, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அஞ்சாப்புலி மற்றும் சத்தியா, கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.