முந்தய பக்கம்

கடலூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

11 Jun 2026, 11:28 pm
கடலூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
<p><strong>கடலூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்</strong> </p><p>கடலூர், ஜூன் 11- கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற வளாகத்தில் வியாழன் பிற்பகல் ரசாயன குண்டுகள் வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர், நீதிமன்ற வளாகத்திலிருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களை உடனடியாக வெளியேற்றினர். மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் வளாகம் முழுவதும் பல மணி நேரம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இறுதியில், எவ்வித சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கிடைக்காததால், இது வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது. முன்னதாக மார்ச் மாதமும் இதேபோல் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது, மிரட்டல் விடுத்த நபரைக் கண்டறிய சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram