தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடலூரில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட 4 மண்டல அலுவலகங்கள் முடக்கம்! மக்கள் பயன்பாட்டுக்கு வராத அவலம்

26 Sept 2026, 1:44 am
கடலூரில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட 4 மண்டல அலுவலகங்கள் முடக்கம்! மக்கள் பயன்பாட்டுக்கு வராத அவலம்

கடலூரில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட 4 மண்டல அலுவலகங்கள் முடக்கம்!

மக்கள் பயன்பாட்டுக்கு வராத அவலம்

கடலூர், செப்.25-கடலூர் மாநகராட்சியில் நிர்வாகத்தைப் பரவலாக்கி, பொதுமக்களுக்கு உள்ளாட்சி சேவைகளை எளிதில் வழங்குவதற்காக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 மண்டல அலுவலகங்களும் முழுமையாக செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களுக்கும் தலா ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மண்டல அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன்படி நான்கு அலுவலகங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

45 வார்டுகள் உள்ள கடலூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர், நிர்வாகத்தை மக்களின் அருகில் கொண்டு செல்வதற்காக மண்டல அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன. பொதுமக்கள் ஒவ்வொரு சிறிய பிரச்சனைக்கும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தைத் தேடி அலைய வேண்டிய நிலையைத் தவிர்ப்பதும், அந்தந்த மண்டலங்களிலேயே புகார்களைப் பெற்று விரைந்து நடவடிக்கை எடுப்பதுமே இதன் நோக்கமாகும்.

ஆனால், ரூ.10 கோடி மதிப்பீட்டில் நான்கு இடங்களில் கட்டப்பட்டு மூன்று இடங்களில் கடந்த திமுக ஆட்சி காலத்திலேயே திறக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் மட்டும் கட்டுமானம் முடிந்த நிலையில் உள்ளது. திறக்கப்பட்ட மண்டல அலுவலகங்கள் முழுமையான மக்கள் சேவை மையங்களாக செயல்படாததால், அவற்றை அமைத்ததன் நோக்கமே கேள்விக்குறியாகியுள்ளது.

மண்டல அலுவலகங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதால், குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளுக்காக பொதுமக்கள் மீண்டும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை நியமித்து, அன்றாட மாநகராட்சி சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்டிடங்களை கட்டுவதற்கும் திறப்பதற்கும் காட்டப்பட்ட அக்கறை, அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லையே ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மண்டல அலுவலகங்களில் தேவையான அதிகாரிகள், பணியாளர்களை உடனடியாக நியமித்து, பொதுமக்களின் மனுக்களைப் பெறுதல், வரி மற்றும் சான்றிதழ் சேவைகள், குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகள், தெருவிளக்கு மற்றும் சாலைப் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றுக்கு மண்டல அளவிலேயே தீர்வு காணும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.

ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அலுவலகங்கள் வெறும் கட்டிடங்களாக நிற்காமல், மக்கள் சேவை மையங்களாக செயல்பட வேண்டும். ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி உள்ளாட்சி நிர்வாகப் பணிகள் முடங்குவதைத் தடுத்து, நான்கு மண்டல அலுவலகங்களையும் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் கூறும் போது, மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள மண்டல அலுவலகங்களை விரைந்து செயல்பாட்டில் கொண்டு வர வேண்டும். திமுக ஆட்சியில் திறக்கப்பட்டதால் தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த பிறகு உள்ளாட்சி நிர்வாககத்தை முடக்கும் நிலையை கைவிட வேண்டும் என்றார். இந்த கோரிக்கை முன்வைத்து சிபிஎம் சார்பில் விரைவில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் பொதுச்செயலாளர் பி.வெங்கடேசன் கூறியது: திறப்பு விழா கண்டும் இன்று வரையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாத நிலைமை உள்ளது. மக்களின் அடிப்படை தேவைகளை விரைந்து எளிதில் நிறைவேற்றுவதற்கு உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல் மாநகராட்சி கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள் அலுவலகத்தில் அமர்ந்து செயல்படுவதற்கு அலுவலகத்தை திறக்க வேண்டும் என்றார்.

- வ.சிவபாலன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.