தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்த வடிகால் வாய்க்கால் மீட்பு

11 Oct 2026, 1:31 am
வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்த வடிகால் வாய்க்கால் மீட்பு

வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்த வடிகால் வாய்க்கால் மீட்பு

கடலூர், அக்.10-கடலூரில் பல ஆண்டுகளாக வணிக நிறுவனங்க ளில் ஆக்கிரமிப்பில் இருந்தவாய்க்காலை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.

கடலூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி வெள்ளப் பாதிப்பு

கள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனால், வடிகால் வாய்க்கால்களை கண்ட றிந்து மழைநீர் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

திருப்பாதிரிப்புலியூர், திருவந்திபுரம் உள்ளிட்டபகுதிகளில் பெய்யும்மழையால் பெருக்கெடு க்கும் வெள்ள நீர், சின்ன வாய்க்கால் வழியாகக் கடலூர் பேருந்து நிலை யத்தைக் கடந்துகெடிலம் ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில், பேருந்து நிலையம் அருகே உள்ள பிரதான வாய்க்கால் பலஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு மூடப்பட்டி ருந்ததால், மழைநீர் வெளி யேறுவதில் தடை ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, மாந கராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து, வாய்க்காலின் வரை படத்தின் அடிப்படையில் அதன் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர்.

கடந்த காலங்களில் பல முறை அந்த வாய்க்காலை மீட்க முயற்சி நடைபெறும் நேரத்தில் முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் புள்ளிகளின் தலையீட்டால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

பிரபல நகைக்கடை உரி மையாளர் பாலு என்பவர் இந்த வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியும் பார்க்கிங் வசதி செய்தும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஆல்பர்ட் வினோத் என்பவர் உயர் நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கின் அடிப்படையில் வடிகால் வாய்க்காலை மீட்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் கிஷன் குமார் உத்தரவின் பேரில், கடலூர்–சிதம்பரம் சாலையில் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் உள்ள வாய்க்காலை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

300 மீட்டர் தூரம் உள்ள வாய்க்கால் மீட்கப்பட்ட நிலையில், கெடிலம் ஆற்று வரையில் மீதமுள்ள வாய்க்காலையும் முழுவதுமாக ஆக்கிரமிப்பு அகற்றி, முறையான வாய்க்கால் அமைத்து மழை நீரை கெடிலம் ஆற்றில் கலப்பதற்கு மாநக ராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.