கடலூர் மாநகராட்சி ஆணையரை கண்டித்து மேயர் தலைமையில் கவுன்சிலர்கள் போராட்டம்
24 Sept 2026, 2:16 am

கடலூர் மாநகராட்சி ஆணையரை கண்டித்து மேயர் தலைமையில் கவுன்சிலர்கள் போராட்டம்

கடலூர், செப்.23-கடலூர் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா தலைமையில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையர் கிஷன்குமாரிடம் புகார் தெரிவித்தனர். அப்போது ஆணையர் தங்களை தரக்குறைவாக பேசியதாகவும், பெண் மேயரை அவமரியாதையாக நடத்தியதாக கூறி, அவரைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த டிஎஸ்பி தமிழ் இனியன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் ஆணையர் அறையை முற்றுகையிடச் சென்ற திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில நிர்வாகிகள், கவுன்சிலர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் மேயர், திமுக நகர செயலாளர் ராஜா உள்ளிட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லாவை சந்தித்து, ஆணையர் மீது புகார் மனு அளித்தனர்.இந்த சம்பவத்தால் கடலூர் மாநகராட்சி பகுதியில் பரபரப்பு நிலவியது.