கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பம் பகுதியில், கொண்டங்கி ஏரியைத்
22 Jun 2026, 11:38 pm
<p>கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பம் பகுதியில், கொண்டங்கி ஏரியைத் தூர்வாரிப் புனரமைக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஏரியின் தற்போதைய நிலை, தூர்வாரப்பட வேண்டிய பகுதிகள் மற்றும் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவர் கேட்டறிந்தார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித் துறைச் செயற்பொறியாளர் வரதராஜபெருமாள், நீர்வளத்துறை உதவிச் செயற்பொறியாளர் வெற்றிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், பார்த்திபன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.</p>
