பிச்சாவரத்தில் தமிழகத்தின் முதல் சூரிய ஆற்றல் மின் படகு கடலூர் ஆட்சியர் தொடங்கி வைத்தார்
31 Dec 2025, 3:37 pm<p><strong>பிச்சாவரத்தில் தமிழகத்தின் முதல் சூரிய ஆற்றல் மின் படகு கடலூர் ஆட்சியர் தொடங்கி வைத்தார்</strong></p>
<p>சிதம்பரம், டிச. 31- கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் தமிழ கத்தின் முதல் சூரிய ஆற்றல் மின் படகு சேவையை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் அந்தப் படகில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் ஒரு பகுதி யாக, ‘காலநிலை மீள்திறன்மிகு கிராமம்’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிள்ளை பேரூராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகக் கூடிய 11 இடங்கள் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளன, அதில் கிள்ளையும் ஒன்று. இப்பகுதியைப் பசுமை வளாகமாக மாற்ற வனத்துறை, மீன்வளத்துறை மற்றும் நீர்வளத்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து நீர் மற்றும் காற்று மாசுபாட்டைத் தவிர்க்க ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் இந்தச் சூரிய ஆற்றல் மின் படகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார். இந்நிகழ்வில் உதவி வனப் பாதுகாவலர் இக்பால், சுற்றுலா அலு வலர் கண்ணன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் நித்திய பிரியதர்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.</p>
