கடலூர் சிறையில் சிறைவாசிகளுக்கு ஓவியப் போட்டி
yesterday

கடலூர் சிறையில் சிறைவாசிகளுக்கு ஓவியப் போட்டி

கடலூர், நவ.11-கடலூர் மத்திய சிறையில் மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றத்தைக் குறைத்து, சிறைவாசிகளின் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் தலைவர்கள், மலர்கள், இயற்கைக் காட்சிகள் ஆகியவற்றுக்கு வண்ணம் தீட்டும் போட்டி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

கடலூர் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளவர்கள் என மொத்தம் 1,000 பேர்அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில்24 பேருக்கு மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றம் தொடர்பான பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இவர்களின் மனநலத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைத்து படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இதன் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை சிறைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜி.வினோத் தொடங்கி வைத்தார்.இதில் பங்கேற்ற சிறைவாசிகள், தேசத் தலைவர்களின் உருவப்படங்கள், மலர்கள் மற்றும் இயற்கைக் காட்சிகளுக்கு ஆர்வத்துடன் வண்ணம் தீட்டி தங்களது ஓவியத் திறமையை வெளிப்படுத்தினர். குறிப்பாக, தலைவர்களின் உருவப்படங்களுக்கு நேர்த்தியாகவும் சிறப்பாகவும் வண்ணம் தீட்டினர்.சிறை அலுவலர் விக்னேஷ், நலஅலுவலர் தமிழ்ச்செல்வன், மனநலநிபுணர் ஜெயஸ்ரீ, மனநல ஆலோசகர்கள் இளையபாரதி, கலைவாணன், சமூகநல நிபுணர் சோனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.