6 மாதமாக மின்சாரமின்றி தவித்த அங்கன்வாடி மையக் குழந்தைகள் அதிகாரி மிரட்டியதாகப் பணியாளர் குற்றச்சாட்டு!
16 Jun 2026, 11:59 pm

6 மாதமாக மின்சாரமின்றி தவித்த அங்கன்வாடி மையக் குழந்தைகள் அதிகாரி மிரட்டியதாகப் பணியாளர் குற்றச்சாட்டு!

கடலூர், ஜூன் 16- கடலூர் முதுநகர் அருகேயுள்ள ஏணிக்காரன்தோட்டம் அங்கன் வாடி மையத்தில், கடந்த 6 மாதங்க ளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டி ருந்ததால் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கும் இம்மையத்தில், 28க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மின் கட்டணம் செலுத்தப்படாத தால், கடந்த ஜனவரி மாதம் முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கத்தால், குழந்தைகளுக்கு உள்ளே அமர முடியாமல் வராண்டாவில் பரா மரிக்கும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை நிலுவைத் தொகை செலுத்தப்பட்டு மின் இணைப்பு மீண்டும் வழங்கப் பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த திட்ட அதிகாரிகள், ‘களஞ்சி யம்’ செயலி மூலம் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கலே காரணம் எனத் தெரிவித்தனர். இதற்கிடையே, அங்கன்வாடி பணியாளர் பிரேமா கூறுகையில், “100 யூனிட்டிற்கும் குறைவாகவே மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் மின்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. முறையான தகவல் அளித்தும் அதிகாரிகள் பணம் செலுத்தவில்லை. மேலும், போராட்டங்களில் பங்கேற்ற தற்காக எனது 20 நாள் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மனநல மருத்துவரைச் சந்திக்கச் சொல்லி அதிகாரி ஒருவர் ஆடியோ பதிவு மூலம் மிரட்டுகிறார்” என வேதனை தெரிவித்தார். இப்பிரச்ச னையில் மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.