2 டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு
5 Oct 2026, 1:04 am
<p><strong>2 டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு</strong></p><p>கடலூர், அக்.4-புதுப்பேட்டை–பண்ருட்டி சாலையில் ஆண்டிக்குப்பம் பகுதியில் ஒரே இடத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் எண் 2450, 2457 ஆகிய இரு கடைகளையும் இடமாற்றம் செய்யக் கோரி, அனைத்து கட்சிகள் சார்பில் வரும் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இப்பகுதியில் கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ள நிலையில், இரு மதுபானக் கடைகளாலும் கூட்டம் அதிகரித்து போக்குவரத்துக்கு இடையூறும், விபத்து அபாயமும் ஏற்படுவதாகவும், கடைகளை இடமாற்றம் செய்யக் கோரிபலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.இதுதொடர்பாக புதுப்பேட்டை ஸ்ரீலதா சீனிவாசன் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.4) நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்கு தமிழகவாழ்வுரிமைக் கட்சி மாவட்டத் தலைவர் இரா. சுரேந்தர் தலைமை வகித்தார். சிபிஎம் வட்ட செயலாளர் எஸ்.கே.ஏழுமலை சிறப்புரையாற்றினார். அதிமுக, தவாக, சிபிஐ, சிபிஎம், பாமக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில்நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் இரு கடைகளையும் இடமாற்றம் செய்யக் கோரி வரும் 12-ஆம் தேதி காலை 10மணிக்கு டாஸ்மாக் கடைகள் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p>
