கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடலூரில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
5 hours before

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடலூரில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூர், நவ.14-கடலூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் ஜவான் பவன் அருகிலிருந்து பேரணியாகச் சென்று ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் – தாம்பரம் பயணிகள் ரயில், மயிலாடுதுறை – கோவை ஜனசதாப்தி ரயில் ஆகியவற்றை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். விழுப்புரம் – திண்டுக்கல் இன்டர்சிட்டி ரயிலை கடலூர் துறைமுகம் வழியாக விருத்தாசலத்திற்கு இயக்க வேண்டும். சேலம் – கடலூர் துறைமுகம் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும். கடலூர் – பழனி – பொள்ளாச்சி – கோவை புதிய ரயிலை இயக்க வேண்டும்.

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலை யத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கடலூர் – புதுச்சேரி – மகாபலிபுரம் புதிய ரயில் பாதைத் திட்டத்தை உருவாக்க வேண்டும். விழுப்புரம் – தஞ்சாவூர் இரட்டை ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர் ரயில் நிலையங்களில் குடிநீர், மேற்கூரை, மின்னணு தகவல் பலகை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கம்மியம்பேட்டை சுத்துக்குளம் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும், மூடப்பட்ட குள்ளஞ்சாவடி ரயில் நிலையத்தை மீண்டும் திறக்கவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இள. புகழேந்தி, மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் ரங்கமணி, விசிக மண்டலச் செயலாளர் முல்லைவேந்தன், மாநில நிர்வாகி திருமார்பன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் அருள்பாபு, குடியிருப்போர் சங்கத் தலைவர் பி வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன், வி.சுப்பராயன், ஆர்.அமர்நாத் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் நாகராஜ், மக்கள் அதி காரம் பாலு, பொதுநல அமைப்பின் ரவி, மீனவர் பேரவை சுப்பராயன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள், குடி யிருப்போர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே, திருச்சியில் இருந்து ரயில்வே துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வந்ததால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.