தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கியூபாவின் சர்க்கரை அரசியலும் அமெரிக்கத் தேர்தலும்: டிரம்ப் - ஃபான்ஜுல் குடும்பக் கூட்டணியின் பின்னணி!

13 Jun 2026, 9:21 pm
கியூபாவின் சர்க்கரை அரசியலும் அமெரிக்கத் தேர்தலும்:  டிரம்ப் - ஃபான்ஜுல் குடும்பக் கூட்டணியின் பின்னணி!
<p><strong>கியூபாவின் சர்க்கரை அரசியலும் அமெரிக்கத் தேர்தலும்: டிரம்ப் - ஃபான்ஜுல் குடும்பக் கூட்டணியின் பின்னணி!</strong></p><p>புளோரிடா: கியூபா மீதான அமெரிக்காவின் தொடர் பொருளாதாரத் தடைகளுக்குப் பின்னால், அமெரிக்காவின் உள்நாட்டுத் தேர்தல்களும் பெரும் கார்ப்பரேட் சர்க்கரை முதலாளிகளின் வணிக நலன்களும் ஒளிந்திருப்பது அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வர சர்க்கரை ஆலை அதிபர்களான ‘ஃபான்ஜுல் குடும்பம்’ (Fanjul Family), கியூபா மீதான அமெரிக்கக் கொள்கைகளைத் தங்களுக்குச் சாதகமாகத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கியூபாவில் புரட்சி ஏற்படுவதற்கு முன்னதாக, அங்குள்ள சர்க்கரைத் தொழிலை ஏகபோகமாகக் கட்டுப்படுத்தி வந்த இந்த குடும்பம், புரட்சிக்குப் பின்னர் அமெரிக்காவிற்குத் தப்பியோடியது. தற்போது அமெரிக்காவின் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இருதரப்பிற்கும் பில்லியன் கணக்கில் தேர்தல் நிதி வழங்கி, கியூபா மீதான வர்த்தக முற்றுகையைத் தொடர்ந்து நீட்டிக்க இவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கியூபாவின் சர்க்கரை சந்தை உலகளவிலும், அமெரிக்காவிலும் நுழைந்தால் தங்களது கார்ப்பரேட் லாபம் பாதிக்கப்படும் என்ற சுயநலமே இவர்களின் கியூப எதிர்ப்பு அரசியலுக்குக் காரணம். அமெரிக்காவின் கியூபக் கொள்கை என்பது ஜனநாயகம் சார்ந்தது அல்ல, அது கார்ப்பரேட் கொள்ளை லாபத்திற்கான சூழ்ச்சி என்பதை இந்த சர்க்கரை அரசியல் அம்பலப்படுத்துகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.