தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“நாம் வெல்லுவோம்!”

10 Jul 2026, 8:44 pm
“நாம் வெல்லுவோம்!”

“நாம் வெல்லுவோம்!”

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு நடத்திய அவசர சிறப்பு மாநாட்டின் (Extraordinary Plenum) நிறைவில், கியூபாவின் ஜனாதிபதியும், கட்சியின் முதன்மைச் செயலாளருமான மிகுயேல் தியாஸ் கேனல் ஆற்றிய உரை, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்க்களத்தில் ஒரு புதிய வரலாற்று மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது. கியூப நாடாளுமன்றத்தின் ஒருமனதான ஆதரவோடு நிறை வேற்றப்பட்டுள்ள 176 பொருளாதார மற்றும் சமூகச் சீர்திருத்தங்களின் ஆழமான பின்னணியை விளக்கி அவர் ஆற்றிய இந்த உரை, கியூபாவின் இறையாண்மை யையும் சோசலிசப் பாதையையும் மிக உணர்ச்சிப்பூர்வமாகப் பிரகடனம் செய்தது.

தமக்கே உரிய புரட்சிகர உத்வேகத்துடன் உரையாற்றிய ஜனாதிபதி மிகுயேல் தியாஸ் கேனல், அமெரிக்க நிர்வாகம் கியூபா மீது ஏவியுள்ள பன்முக ஏகா திபத்தியத் தாக்குதல்களையும், காட்டுமிராண்டித்தனமான ‘இரண்டாம் நிலைத் தடைகளையும்’ கடுமையாகச் சாடினார். கடந்த ஐந்து மாதங்களில் ஒரேயொரு எரிபொருள் கப்பல் மட்டுமே கியூப மண்ணைத் தொட அனுமதித்துள்ள அமெரிக்கா வின் கொடூரமான ‘எரிசக்தி முற்றுகை’, மக்களின் அன்றாட வாழ்க்கையையும் நாட்டின் நுகர்வுச் சங்கிலியையும் பெரிதும் பாதித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். எனினும், இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் கியூபாவை ஒரு ‘தோல்வியடைந்த அரசு’ (Failed State) என உலகிற்குச் சித்தரிக்க முயலும் அமெரிக்காவின் பொய்ப்பிரச்சாரங்களைக் கியூப மக்களின் அசாத்தியமான தியாகமும், புரட்சிகர ஒற்றுமையுமே தினந்தோறும் முறியடித்து வருவதாக அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

“கியூபாவிற்கு இனிமேலும் கால தாமதங்கள் தேவையில்லை; அதற்குத் தேவை உடனடித் தீர்வுகளே ஆகும். இது புதிய அலுவலகங்களை உருவாக்குவதோ அல்லது கூடுதல் கூட்டங்களை நடத்துவதோ அல்ல, மாறாக உறுதியான முடிவுகளை எட்டுவதாகும். ஆட்சி செய்வது என்பது மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதும், தடைகளை அகற்றுவதும், முடிவுகள் அனைத்தும் உண்மையான முன்னேற்றங்களாக மாறுவதை உறுதி செய்வதுமே ஆகும்” என்று ஜனாதிபதி மிக ஆழமாகப் பதிவு செய்தார்.

சோசலிசப் பாதுகாப்பிற்கான முதிர்ச்சியடைந்த பொருளாதார மாற்றம்

ஜனாதிபதி மிகுயேல் தியாஸ் கேனல் தனது உரையில், கியூபா தற்போது மேற்கொண்டுள்ள இந்த 176 விரிவான சீர்திருத்தங்கள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்களுக்கு அஞ்சி எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல என்பதை மிகத் தெளிவாகப் பதிவு செய்தார். மாறாக, கியூபப் புரட்சியைத் தற்போதைய உலகச் சூழலில் நிலைநிறுத்துவதற்கான முதிர்ச்சியடைந்த சிந்தனையின் அடிப்படையிலும், நாடு தழுவிய கூட்டு விவாதங்களின் மூலமுமே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

மாபெரும் புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் ‘நெருக்கடியான காலகட்டங்களிலும் வளர்ச்சிக்கான வேட்கையை நாம் கைவிடக் கூடாது’ என்ற தத்துவத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஒவ்வொரு நெருக்கடியையும் ஒரு புதிய எழுச்சிக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என உழைக்கும் வர்க்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். அதனால்தான், சோசலிச மாதிரியின் தூண்களாக விளங்கும் அரசு நிறுவனங்களுக்கு முழு தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். நுகர்பொருட்களுக்கான பொது மானியங்களை முறைப்படுத்தி, பின்தங்கிய விளிம்புநிலை மக்களுக்கு நேரடியாக மானியங்களை வழங்குவதன் மூலம் சமூக நீதியும், வளங்களின் சமமான பகிர்வும் முழுமையாக உறுதி செய்யப்படும் என அவர் விவரித்தார்.

கியூபாவின் ஒவ்வொரு சட்டமுன்னெடுப்பும் முறையான தலைவர்கள், காலக்கெடு மற்றும் செயல்பாட்டு குறிகாட்டிகளுடன் கண்காணிக்கப்படும் என்றும், ஊழல் மற்றும் தேவையற்ற சிவப்பு நாடா முறைகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். தேசியத் தலைவர் ஜோஸ் மார்ட்டி நமக்குக் கற்பித்தது போல, ஏகாதிபத்திய நாசவேலைகளில் இருந்து பாதுகாப்பதற்காகச் சில பொருளாதார நகர்வுகளை நாம் ரகசியமாக நிர்வகிக்க வேண்டியிருக்கும், ஆனால் அந்த ரகசியம் ஒருபோதும் மக்களிடமிருந்து எதையும் மறைப்பதற்கான சாக்குப்போக்காக இருக்காது என்றும் தெளிவுபடுத்தினார்.

இளைஞர் சமூக வலைப்பின்னலும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரகடனமும்

இந்தப் புதிய நடைமுறை உத்தியின் கீழ், கியூபாவின் ஒவ்வொரு நகராட்சியும் தன்னாட்சி அதிகாரம் பெற்று விளங்கப் போகிறது. நகராட்சிகள் நேரடியாகவே தங்கள் பகுதிகளுக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், தங்களுக்கான அந்நியச் செலாவணியை நிர்வகிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு, கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் அனைத்தும் அதிகாரத்துவ சிவப்பு நாடா முறைகளில் இருந்து விடுபட்டு, மக்கள் தேவைகளுக்குத் துரிதமாகச் செயல்படும் முற்போக்கான அமைப்புகளாக மாற்றியமைக்கப்படும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

பொருளாதார வாய்ப்புகளுடன் சோசலிச கியூபாவை வலுப்படுத்த, இளைஞர்கள் தங்கள் சமூகங்களில் தீவிரமாகச் செயல்பட “சமூக இளைஞர் வலைப்பின்னல்” (Community Youth Network) என்ற முற்போக்கான தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறும் வழிகாட்டுதல்களை வழங்கும் மற்றொரு அமைப்பு அல்ல; மாறாக, இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சி, வேலைவாய்ப்பு, புதுப்பிக்கத்தக்க எரி சக்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தித் திட்டங்களை உருவாக்கு வதற்கான கருவிகளையும் பொறுப்புகளையும் வழங்கும் அரணாகும். இதன் மூலம் கியூப இளைஞர்கள் தங்கள் தாய்நாட்டிலேயே தங்கி, சோசலிசக் கட்டுமானத்திற்குப் பங்களிக்க முடியும்.

எதிரி ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தும் உளவியல் போரை ஏவினாலும், சரணடையவோ, அவமானப்படவோ அல்லது புரட்சி தந்துள்ள உன்னதமான அடைவுகளை இழக்கவோ கியூப மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை என்று ஜனாதிபதி மிகுயேல் தியாஸ் கேனல் இறுதியாகப் பிரகடனம் செய்தார். நாம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்பதற்காக மட்டும் ஒன்றுகூடவில்லை; மாறாக நிலத்தில் இறங்கிப் பயிரிடும் விவசாயி, முதலீடு செய்யும் சிறு வணிகர், சோலார் பேனல் பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் என அனைவரும் இணைந்து சோசலிச கியூபாவை வலுப்படுத்தவே ஒன்றிணைந்துள்ளோம் என்றார். அவரது உரையின் முடிவில், ஒட்டுமொத்த பிரதிநிதிகளும் உழைக்கும் மக்களும் எழுந்து நின்று, “நாம் வெல்வோம்! (We will prevail!)” என்று எழுப்பிய தொடர் முழக்கங்கள், கியூபப் புரட்சியின் தளராத வீரியத்தை உலகிற்கு மீண்டும் பறைசாற்றின.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.