தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு ஜனாதிபதி தியாஸ் கேனல் கடும் கண்டனம் எத்தகைய நெருக்கடியிலும் கியூபாவின் லட்சிய உறுதி குலையாது என பிரகடனம்

7 Jun 2026, 10:29 pm
அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு ஜனாதிபதி தியாஸ் கேனல் கடும் கண்டனம் எத்தகைய நெருக்கடியிலும் கியூபாவின் லட்சிய உறுதி குலையாது என பிரகடனம்

அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு ஜனாதிபதி தியாஸ் கேனல் கடும் கண்டனம் எத்தகைய நெருக்கடியிலும் கியூபாவின் லட்சிய உறுதி குலையாது என பிரகடனம்

ஹவானா வாஷிங்டன் நிர்வாகத்தால் கியூபா மீது ஏவப்பட்டுள்ள கொடூரமான எரிசக்தி முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளை கியூபா ஜனாதிபதியும், கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலாளருமான மிகுயெல் தியாஸ் கேனல் வன்மையாகக் கண்டித்துள்ளார். கியூபா உள்துறைஅமைச்சகத்தின் ஆண்டு விழா மற்றும் கியூபப் புரட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூத்த தலைவர் ரால் காஸ்ட்ரோவின் 95-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அரசியல்-பண்பாட்டு விழாவில் உரையாற்றிய போதே அவர் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரகட னத்தை வெளியிட்டார். ஹவானாவில் உள்ள கார்ல் மார்க்ஸ் திரை யரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெள்ளை மாளி கையின் வளர்ந்து வரும் இந்த விரோதப் போக்கு கியூப மக்களுக்கு எதிரான கடுமையான பொருளா தார மற்றும் சமூகப் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கா கவே திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது என்று அவர் சாடினார்.

ஐந்து மாதங்களில் ஒரே ஒரு எரிபொருள் கப்பல்: பொருளாதாரப் படுகொலை

அமெரிக்க அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் வக்கிரமான கொள்கைகள் கியூபாவின் உறுதியான எதிர்ப்பு ஆற்றல் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு லட்சியத்தின் முன்னால் நிச்சயம் முறி யடிக்கப்படும் என்று தியாஸ் கேனல் எச்சரித்தார். வாஷிங்டன் நடத்தி வரும் இந்தப் பொருளாதாரப் படுகொலையின் கோர முகத்தை விவரித்த அவர், கடந்த ஜனவரி 29 அன்று விதிக்கப்பட்ட கொடூரமான எரிசக்தி முற்றுகையின் காரணமாக, கடந்த ஐந்து மாதங்களில் கியூபாவிற்கு ஒரே ஒரு எரிபொருள் கப்பல் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டுள்ளது என்ப தைப் புள்ளிவிவரத்துடன் சுட்டிக்காட்டினார். மேலும், கியூபாவின் பொதுத்துறை நிறுவனங் களின் செயல்பாடுகளைக் குற்றம்சாட்டும் நோக்கி லும், சர்வதேச நிறுவனங்கள் கியூபாவுடன் வர்த்தகம் செய்வதைத் தடுத்து அபராதம் விதிக்கும் வகையிலும் மே 1 அன்று வெள்ளை மாளிகை பிறப்பித்த புதிய உத்தரவையும் அவர் அம்பலப்படுத்தினார். இந்த நிதி ரீதியிலான அச்சுறுத்தல்களும், கியூபாவின் சர்வதேச மருத்துவக் குழுக்களுக்கு எதிராக அமெ ரிக்கா தொடுத்துள்ள முடக்க நடவடிக்கைகளும் கியூபாவின் அரசு வருவாயை முற்றிலும் முடக்கி, அந்நாட்டின் உலகப் புகழ்பெற்ற பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைச் சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்று ஜனாதிபதி சாடினார்.

'தோல்வியடைந்த அரசு' என்ற பொய்ப் பிரச்சாரத்தின் பின்னணி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படும் கியூபா எதிர்ப்பு பாசிசக் குழுக்கள், கியூபாவை ஒரு "தோல்வி யடைந்த அரசு" (Failed State) எனச் சித்தரிக்க முய லும் பொய்க் கதைகளை தியாஸ் கேனல் முற்றிலு மாக நிராகரித்தார். கியூப மண்ணில் ரஷ்யா அல்லது சீனாவின் ராணுவத் தளங்கள் அமைக்கப்பட வுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் திட்டமிட்டுப் பரப்பி வரும் வதந்திகள், கியூபா மீது ஒரு நேரடி ராணுவ ஆக்கிரமிப்பைத் தொடுப்பதற்கான போலிச் சான்று களை உருவாக்குவதற்காகவே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ரால் காஸ்ட்ரோவின் வரலாற்றுப் பங்களிப்பு

கியூபாவின் பாதுகாப்புச் சேவைகளை நிறுவுவ தில் புரட்சித் தலைவர் ரால் காஸ்ட்ரோ ஆற்றிய வியக்கத்தக்கப் பங்களிப்பை தியாஸ் கேனல் தனது உரையில் நினைவு கூர்ந்தார். ரால் காஸ்ட்ரோ தனது 27-ஆவது வயதிலேயே, இரண்டாவது கிழக்கு முன்னணியில் 'ரகசியச் சேவைப் படையை' உரு வாக்குவதற்கான உத்தரவில் கையெழுத்திட்ட தீர்க்க தரிசனத்தை அவர் சுட்டிக்காட்டினார். இதுவே பிற்கா லத்தில், ஜூன் 6, 1961-இல் நிறுவப்பட்ட தற்போதைய உள்துறை அமைச்சகத்தின் அடித்தளமாக அமைந்தது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தி யத்தை ஒரு 'அமைதி மண்டலமாக' பிரகடனப்படுத்து வதில் ரால் காஸ்ட்ரோவின் சர்வதேச அளவிலான ராஜதந்திரப் பங்களிப்பையும், கொலம்பியா நாட்டின் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அவர் வகித்த முக்கிய மத்தியஸ்தர் பாத்திரத்தையும் ஜனாதிபதி பெருமையுடன் குறிப்பிட்டார். அத்துடன், கடந்த ஜனவரி 3, 2026 அன்று வெனிசுலாவில் அமெரிக்கப் படைகளின் அத்துமீறிய தாக்குதலில் வீரமரணமடைந்த 32 கியூபப் போராளிகளுக்கு தியாஸ் கேனல் தனது வீரவணக்கத்தைச் செலுத்தினார். சமீபத்தில் கியூப எல்லைக்குள் ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை முறியடித்த ஐந்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தீரத்தையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.