தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘கியூபா தனித்து விடப்படவில்லை’ அமெரிக்கத் தடைகளுக்கு எதிராக ஹவானாவில் முழங்கிய சர்வதேச ஒற்றுமை மாநாடு

6 May 2026, 11:03 pm
‘கியூபா தனித்து விடப்படவில்லை’ அமெரிக்கத் தடைகளுக்கு எதிராக ஹவானாவில் முழங்கிய சர்வதேச ஒற்றுமை மாநாடு

‘கியூபா தனித்து விடப்படவில்லை’ அமெரிக்கத் தடைகளுக்கு எதிராக ஹவானாவில் முழங்கிய சர்வதேச ஒற்றுமை மாநாடு

ஹவானா (கியூபா) மே 6 - அமெரிக்காவின் ஏகாதிபத்திய அச்சுறுத் தல்கள் மற்றும் பல பத்தாண்டுகளாகத் தொட ரும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் கியூபா சர்வதேச சமூகத்தில் தனிமைப் படுத்தப்படவில்லை என்பதை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், தலைநகர் ஹவானா வில் பிரம்மாண்டமான சர்வதேச ஒற்றுமை மாநாடு நடைபெற்றது. “பிடலுடன் 100 ஆண்டு கள்” (100 Years with Fidel) என்ற கருப்பொரு ளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அமெரி க்காவின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரண்டுநின்றன.

சர்வதேசப் பிரதிநிதிகளின் சங்கமம்

கடந்த மே 2 அன்று கியூபத் தலைநகர் ஹவானாவில் நடைபெற்ற இந்த “கியூபா வுடனான சர்வதேச ஒற்றுமை மற்றும் ஏகாதி பத்திய எதிர்ப்பு மாநாட்டில்” (International Meeting of Solidarity with Cuba and Anti-Imperialism), உலகின் 36 நாடுகளைச் சேர்ந்த 766 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் 152 அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் சர்வதேச ஒற்றுமை அமைப்புகளின் தலை வர்கள் கலந்துகொண்டு கியூபப் புரட்சிக்குத் தங்கள் ஆதரவை வழங்கினர்.

மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட பிரகடனம், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், அண்மைக் கால கெடுபிடிகள் மற்றும் அதிகரித்து வரும் ஏகாதிபத்திய ஆக்கிர மிப்புகளைக் கடுமையாகச் சாடியது. கியூபா வின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்களையும் அப்பட்டமாக மீறுவதாகப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர்.

அமெரிக்கத் தடைகளுக்கு எதிரான வலுவான குரல்

உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள பன்முகத்தன்மை கொண்ட பொருளாதார, நிதி மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புப் போக்கே முதன்மைக் காரணம் என மாநாடு சுட்டிக்காட்டியது. கியூபா மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார, வர்த்தக மற்றும் நிதித் தடைகள், எரிசக்தி கட்டுப்பாடுகள் மற்றும் கியூபாவை “பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில்” தொடர்ந்து வைத்திருக்கும் அமெரிக்காவின் பிடிவாதம் ஆகியவற்றை “உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் விடுக்கப்பட்ட முதன்மை அச்சுறுத்தல்” எனப் பிரகடனம் விவரித்தது. குறிப்பாக, மே 1 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்ட புதிய நிர்வாக உத்தரவை (Executive Order) இந்த மாநாடு முற்றிலுமாக நிராகரித்தது. கியூபாவின் எரிசக்தி, சுரங்கம் மற்றும் பாதுகாப்புத் துறை களை இலக்கு வைக்கும் இந்த உத்தரவு “ஒரு தலைப்பட்சமானது, சட்டவிரோதமானது மற்றும் அத்துமீறியது” என்று விமர்சிக்கப் பட்டது. இந்த நடவடிக்கைகள் கியூப மக்க ளைக் கூட்டுத் தண்டனைக்கு (Collective Punish ment) உள்ளாக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை என்று பிரதிநிதிகள் சாடினர்.

உலகளாவிய ஒற்றுமை முழக்கம்

கியூபா விவகாரத்தைத் தாண்டி, இந்த மாநாடு உலகளாவிய நீதிக்கும் குரல் கொடுத்தது:

பாலஸ்தீனம்: பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இஸ்ரேலின் அத்துமீறல்களைக் கண்டித்த பிரதிநிதிகள், கைது செய்யப்பட்டுள்ள ஆர்வ லர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினர்.

பாலஸ்தீனம்: வெனிசுலா தலைமைக்குத் தனது ஆதரவை வழங்கிய மாநாடு, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் சிலியா புளோரஸ் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியது.

அமைதி மண்டலம் : லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை “அமைதி மண்டலமாக” (Zone of Peace) நீடிக்கச் செய்ய வேண்டும் என்றும், இப்பகுதியில் ராணுவத் தலையீடுகளை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. ஜனாதிபதி மிகுயேல் தியாஸ் கேனல் உரை மாநாட்டின் நிறைவு அமர்வில் கியூப ஜனாதிபதியும், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலாளருமான மிகுயேல் தியாஸ் கேனல் உரையாற்றினார். அவரது உரை சர்வதேச ஒற்றுமைக்கான நன்றியாக வும், அமெரிக்காவின் அநீதியான கொள்கை களுக்கான பதிலடியாகவும் அமைந்தது.

“ஒற்றுமையை எவராலும் முடக்க முடியாது. உங்களைப் போன்ற மக்கள் உலகில் இருக்கும் வரை கியூபா ஒருபோதும் தனித்து விடப்படாது” என்று அவர் உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார். கியூபா ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுவதற்கு அதன் ராணுவ பலம் காரணமல்ல, மாறாக அந்த நாடு உலகுக்குக் காட்டி வரும் “எதிர்ப்பு மற்றும் படைப்பாற்றலின் முன்மாதிரியே” அமெரிக்காவை அச்சுறுத்து கிறது என்று அவர் கூறினார்.

“எங்களிடம் மிச்சம் இருப்பதை நாங்கள் மற்றவர்களுக்குத் தருவது என்பதல்ல; எங்க ளிடம் உள்ளதை உலக மக்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அதுவே ஒற்றுமையின் தத்துவம்” என்று குறிப்பிட்ட அவர், கியூபாவின் மே தினப் பேரணிகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கிப் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்தது, அவர்கள் தங்கள் அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறைசாற்றுகிறது என்றார்.

அமெரிக்காவின் உலகளாவிய தலையீடுகளும் கியூபாவின் நிலையும்

அமெரிக்கா தனது உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்கவைக்க “கருத்தியல், கலாச்சார மற்றும் ஊடகப் போர்” நடத்தி வருவ தாக தியாஸ் கேனல் குற்றம் சாட்டினார். கியூபா, வெனிசுலா மற்றும் ஈரான் போன்ற நாடு களுக்கு எதிராகப் பொய்ப் பிரச்சாரங்களை ஏவி, அந்த நாடுகளின் உள்விவகாரங்களில் தலை யிடுவதை அமெரிக்கா வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

“கியூப மக்கள் மீது அமெரிக்காவிற்கு உண்மையில் அக்கறை இருந்தால், முதலில் அந்தப் பொருளாதாரத் தடைகளை நீக்கட்டும்,” என்று அவர் சவால் விடுத்தார். 60 ஆண்டு காலத் தடைகள், குறிப்பாக எரிசக்தித் துறையில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகளை அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், கியூப அரசு பொருளாதாரச் சீர்திருத்தங்கள், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்தல் ஆகிய உத்திகள் மூலம் இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று உறுதியளித்தார்.

எதிர்காலத் திட்டங்களும் தீர்மானங்களும்

இந்த மாநாடு சில முக்கியமான செயல் திட்டங்களை முன்மொழிந்துள்ளது:

சர்வதேச நெட்வொர்க்: அமெரிக்காவின் ஊடகப் பொய்களை எதிர்கொள்ள சர்வதேச ஊடக வலையமைப்பை வலுப்படுத்துதல்.

ஆர்ப்பாட்டங்கள்: உலகம் முழுவதும் அமெரிக்கத் தூதரகங்களுக்கு வெளியே ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங்களை நடத்துதல்.

பொருளுதவி: “Nuestra América Convoy” போன்ற முயற்சிகள் மூலம் கியூபா விற்கு நேரடிப் பொருளுதவிகளை வழங்குதல்.

ஆகஸ்ட் 10 முதல் 13 வரை நடைபெறவுள்ள “பிடல்: பாரம்பரியமும் எதிர்காலமும்” (Fidel: Legacy and Future) என்ற முதல் சர்வதேசக் கருத்தரங்கில் பங்கேற்கவும் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. “

யார் இப்போது கியூபாவுடன் நிற்கிறார் களோ, அவர்கள் எப்போதும் நீதிக்காக நிற்பார் கள்,” என்ற ஜனாதிபதி தியாஸ் கேனலின் வார்த்தைகள் மாநாட்டின் சாரத்தை விளக்குவ தாக அமைந்தது. தடைகள் கியூபாவின் பொருளாதாரத்தை முடக்கலாம், ஆனால் அதன் புரட்சிகர உணர்வை ஒருபோதும் சிதைக்க முடியாது என்பதை ஹவானா மாநாடு மீண்டும் நிரூபித்துள்ளது. அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளை முறியடிக்க உலகெங்கிலும் உள்ள முற்போக்கு சக்திகள் கியூபாவுடன் கைகோர்த்து நிற்கின்றன. (லெப்ட் வியூஸ்)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.