முந்தய பக்கம்

பொருளாதார நெருக்கடியை முறியடிக்க கியூபாவின் புதிய உத்தி:

13 Jun 2026, 9:18 pm
பொருளாதார நெருக்கடியை முறியடிக்க கியூபாவின் புதிய உத்தி:
<p><strong>பொருளாதார நெருக்கடியை முறியடிக்க கியூபாவின் புதிய உத்தி: </strong></p><p> நகராட்சிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு கூடுதல் சுயாட்சி! ஹவானா: அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்ள, கியூப அரசு தனது பொருளாதாரக் கொள்கைகளில் அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரு கிறது. இதன் முக்கியப் பகுதியாக, நாட்டின் பொரு ளாதார எந்திரத்தின் அச்சாணியாக விளங்கும் நகராட்சிகளுக்கும் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விரிவான சுயாட்சி அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி மிகுயெல் தியாஸ்-கானல் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, ஒவ்வொரு நகராட்சி யும் தங்களுக்குக் கீழ் உள்ள உள்ளூர் வளங்களைக் கொண்டு, மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி மற்றும் சேவைகளைத் திட்டமிட முழு அதிகாரம் பெறும். அதேபோல், அரசு நிறுவனங்கள் எவ்வித வரம்புகளுமின்றி அனைத்து வகையான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் ஏகபோகங்களுக்கு மாற்றாக, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மற்றும் இதர பொருளாதார சக்திகளுக்கு இணையாக வலுப்படுத்துவதே இந்த உத்தியின் முக்கிய நோக்கமாகும். உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமே ஏகாதிபத்திய பொருளாதார முற்றுகையை உடைக்க முடியும் என்ற கியூபாவின் வர்க்கப் போராட்டப் பார்வையை இச்சீர்திருத்தம் உணர்த்துகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram