எண்ணெய் தடையும் ‘போர் நடவடிக்கை தான்’ ஐ.நா. பாதுகாப்பு அவையில் அமெரிக்காவுக்கு கியூபா கண்டனம்!
30 May 2026, 9:37 pm

எண்ணெய் தடையும் ‘போர் நடவடிக்கை தான்’ ஐ.நா. பாதுகாப்பு அவையில் அமெரிக்காவுக்கு கியூபா கண்டனம்!

நியூயார்க், மே 30 - கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் முடிவுகள் அனைத்தும் ஒரு ‘போர் நடவடிக் கைக்கு’ இணையானவை என்றும், இவை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டால், அது கியூபாவில் மோசமான உயிரிழப்புகளையும் பெரும் துயரங்களையும் ஏற்படுத்தி ஒரு ‘மனிதப் பேரழிவிற்கு’ வழிவகுக்கும் என்றும் ஐ.நா பாதுகாப்புப் அவையில் கியூப வெளியுறவுத் துறை அமைச்சர் புரூனோ ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

கியூபாவில் மோசமான சூழல் உருவாகி யுள்ள நிலையில், சர்வதேச சமூகம் இதில் தலையிட்டு, கியூபா அதன் வாழும் உரிமையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“2025 டிசம்பர் முதல் எந்த நாடும் கியூ பாவிற்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்யக்கூடாது என அமெரிக்கா தடை விதித் துள்ளது.

இந்த தடைகளின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கடற்படை முற்று கைக்கு சமமானதாகும். இது ஒரு போர் நடவடிக்கை.

இனப்படுகொலை நடவடிக்கை. இது கியூப மக்கள், அவர்களின் ஒருமைப் பாடு மற்றும் சுதந்திரமான வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் சூழ்நிலைகளை உருவாக்குகிறது.

மேலும், இது ஒரு கொடூர மான மற்றும் கண்மூடித்தனமான ‘தண்டனை’ ஆகும்.

இதன் விளைவாக, கியூபாவில் ஆயிரம் பிறப்புகளுக்கு 4.0 என்ற அளவிலிருந்த சிசு மரணங்கள் இப்போது 9.9 ஆக இரட்டிப் பாகியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆயுட்காலம் 85 சத விகிதத்திலிருந்து 65 சதவிகிதமாகக் குறைந் துள்ளது” என்று ரோட்ரிக்ஸ் வேதனை தெரி வித்துள்ளார்.

கியூபாவிற்கு கச்சா எண்ணெய் கொடுத்து வந்த முக்கிய வர்த்தக நாடு வெனிசுலா.

இந்நாட்டின் ஜனாதிபதியை ஜனவரி மாதம் அமெரிக்கா கடத்திச் சென்றது. இதனால் அந்நாட்டுடனான வர்த்தகமும் முடக்கப்பட்டு விட்டது.

இந்த ஆண்டு இதுவரை ஒரே ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் மட்டுமே கியூபா சென்று சேர்ந்துள்ளது.

இதனால் பொது மக்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலை மிக வேகமாக மோசமடைந்து வருகிறது.

இந்த எண்ணெய் தடையுடன் 1960- களில் இருந்து விதிக்கப்பட்ட பொருளா தார மற்றும் வர்த்தக தடைகளும் சேரும் பட்சத்தில், அது கியூபாவில் கடுமையான குழப்பத்தை உருவாக்கும்; அதைப்பயன் படுத்தி ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்ற வேண்டும் என்பதே அமெரிக்காவின் திட்ட மாகும்.

இவற்றின் அடிப்படையில் தான், தற்போதைய நிலைமைகளை ஐ.நா. அவையில் விளக்கிப் பேசியிருக்கும் ரோட் ரிக்ஸ், அமெரிக்கா - கியூபா மீது தாக்குதல் நடத்தினால் அது ‘ஒரு ரத்தக் களரியை’ தூண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

கியூபாவிற்கு ஆதரவளிப்போம் - சீனா உறுதி!

கியூபாவிற்கு ஆதரவளிப்பதாகவும், ‘அதிகார அரசியல் மற்றும் அடக்குமுறைகளை’ எதிர்த்துப் போராடப் போவதாகவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உறுதி அளித்துள்ளார். “சீனா தொடர்ந்து, நீதியை நிலைநாட்டும், கியூபாவிற்காகக் குரல் கொடுக்கும், கியூப மக்களின் நியாயமான நோக்கத்திற்கு ஆதரவளிக்கும், மேலும் கியூபாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பங்களிக்கும்” என்றும் வாங் யீ தெரிவித்துள்ளார். மேலும், “அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை உறுதியுடன் மதிப்பதே இப்போதைய அவசியமாகும். அனைத்து வடிவங்களிலான அதிகார அரசியல் மற்றும் அடக்குமுறைகளையும் நாம் எதிர்க்க வேண்டும்” என்றும் வாங் யீ மறைமுகமாக அமெரிக்காவை சாடியுள்ளார். கியூபாவுடன் சீனா நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. கியூபாவின் உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க 60,000 டன் அரிசியை நன்கொடையாக வழங்க சீனா உறுதியளித்துள்ளது. இதில் முதல் பகுதி ஞாயிற்றுக்கிழமையன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கியூபாவிற்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் ராணுவ பலத்தை மிரட்டலாகப் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும்” என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.