தீக்கதிர் உலக செய்திகள்
6 May 2026, 9:01 pm

அமெரிக்கா பொய் சொல்கிறது : கியூபா கடும் கண்டனம்

கியூபா நாட்டின் மீது எண்ணெய் முற்றுகை எதுவும் விதிக்கப்படவில்லை என்று அமெரிக்க வெளியுற வுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறிய கருத்தை கியூபா கடுமையாகக் கண்டித்துள்ளது. டிரம்ப் ஜனவரி 29 அன்று கியூபாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். கடந்த நான்கு மாதங்களில் ஒரே ஒரு எரிபொருள் கப்பல் மட்டுமே கியூபாவிற்கு வந்துள்ளது. எங்களுக்கு எண்ணெய் விற்பனை செய்யும் நாடுகள் அனைத்தும் மிரட்டப்படுகின்றன. இது சுதந்திர வர்த்தக விதி களுக்கு எதிரானது,” என்று கியூபா கண்டித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: பின்வாங்கும் டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் டிரம்ப் பின்வாங்கியுள்ளார். ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அவகாசம் அளிக்கும் வகையில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு பாதுகப்பு தரும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அவர் கூறியுள்ளார். எனினும் ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படைகளின் முற்றுகை தொடர்ந்து நீடிக்கும். பாகிஸ்தான் மற்றும் இதர நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியைத் தொடர்ந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தென்சீனக் கடலில் ஜப்பான் போர்ப் பயிற்சி

தென்சீனக் கடல் பகுதியை ஒட்டிய கடல் பகுதியில் புதன்கிழமை அன்று பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சி நடத்தியுள்ளன. தோ ளோடு தோள் என்ற பொருளில் இந்த ஆண்டுக்கான போர்ப் பயிற்சியில், முதன்முறையாக ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகள் நேரடிப் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொண்டுள்ளன.இந்தப் பயிற்சி யில் 10,000 அமெரிக்க வீரர்கள், 1,400 ஜப்பானிய வீரர்கள் உட்பட மொத்தம் 17,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

சமூக ஆர்வலர்களை விடுதலை செய்க : இஸ்ரேலுக்கு ஐநா வலியுறுத்தல்

சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள சைஃப் அபு கெஷெக், தியாகோ டி அவிலா ஆகிய இருவரையும் இஸ்ரேல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. அவர்கள் மீது எந்தவிதக் குற்றச்சாட்டுக ளும் பதிவு செய்யப்படாமல் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும், மனிதாபிமான உதவிகளை வழங்க முயற்சிப்பதும் ஒரு குற்றச்செயல் அல்ல என்று ஐ.நா செய்தித் தொடர்பாளர் தமீன் அல்-கிடன் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவை வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்: சீனா

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உலக நன்மைகளுக்காகவும், மனிதகுலத்தின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்று ஐ.நா அவைக்கான சீனாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி சுன் லீ வலியுறுத்தியுள்ளார். இத்தொழில்நுட்பம் புதிய தொழில்புரட்சியின் உந்துசக்தியாக உள்ளது. இது தொழில்துறைகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மக்களின் அன்றாட வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியின் புதிய எஞ்சினாகத் திகழ்கிறது. செயற்கை நுண்ணறிவு எப்போதும் மனிதகுலத்திற்குச் சேவை செய்ய வேண்டும் மற்றும் மனிதர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

டிரம்ப் நிதி வெட்டால் சாவின் விளிம்பில் சோமாலிய மக்கள்

மொகதிஷு, மே 6- தொடர் வறட்சியும் உள்நாட்டு யுத்த மும் சோமாலியாவை கடுமையான உணவு நெருக்கடிக்கு தள்ளியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்ட சர்வதேச உதவி நிதி வெட்டு அந்நாட்டின் நிலைமையை மேலும் சோகமயமாக்கியுள்ளது.

ஜனவரி மாதம் மட்டும் 3 லட்சத் திற்கும் மேற்பட்ட மக்கள் தங்குமிடம் இழந்து அலைகின்றனர். ஐ.நா பாது காப்பு முகாம்களில் உள்ள குழந்தை கள் உணவின்றி ஊட்டச்சத்து குறைபாட்டால் பட்டினியில் உயிரி ழக்கின்றனர். மருத்துவமனைகளில் இடமில்லாமல் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

நிதி வெட்டுப் பின்னணி

2025 இல் டிரம்ப் அமெரிக்காவின் சர்வதேச மனிதாபிமான உதவி நிதியை வெட்டினார். இதனால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஐ.நா அவை செய்து வந்த நிவாரண உதவிகள் கொஞ்சம் கொஞ்ச மாக முடங்கி வருகின்றன. குறிப்பாக சோமாலியாவிற்கான ஐ.நா. நிதியின் மிகப்பெரிய பங்களிப்பாளராக அமெ ரிக்கா இருந்த நிலையில் டிரம்ப்பின் நிதி வெட்டு அந்நாட்டையும் மக்களையும் சாவின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது.

தற்போது சோமாலியாவில் 200க்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் மூடப்பட்டுள்ளன. 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. கிஸ்மாயோ புறநகர் முகாம்களில் இயங்கி வந்த பல சர்வதேச நிறுவனங்கள் செயல்படுவதை நிறுத்திவிட்டன.

சோமாலியா ஏற்கெனவே மிக மோசமான வறுமையில் இருந்த நாடு. 1990களில் அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு அங்கு உள்நாட்டு யுத்தம் வெடித்தது. குறிப்பாக அல்-ஷபாப் (Al-Shabab) ஆயுதக் குழுவின் தொடர் தாக்குதல் கள், வெள்ளம், வறட்சி ஆகிய வற்றால் அந்நாடு மிகவும் மோசமான நிலையில் தவித்து வருகிறது.

குறிப்பாக காலநிலை மாற்றத்தால் அகதிகள் பாதிக்கப்படும் நாடுகளில் முன்னணியில் சோமாலியாதான் உள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாடும் மருத்துவ வசதிகள் பற்றாக்குறையும் ஊட்டச்சத்துக் குறைபாடும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே தினசரி சாப்பிட மூன்றில் ஒருவருக்கு உணவே இல்லாத அந் நாட்டில் தற்போதைய சூழல் மிகப் பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரால் எரிபொருள் விலை உயர்ந்து உணவு மற்றும் குடிநீர் வியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான ஊட்டச்சத்துக் குறை பாட்டுக்கு சிகிச்சை தரக்கூடிய மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து சிகிச்சைக்காக வரும் நிலையில் மருத்துவமனையில் இடமின்மையாலும் மருத்துவப் பணி யாளர் பற்றாக்குறையாலும் நோயாளி களை திருப்பி அனுப்புகிறார்கள்.

ஒவ்வொரு படுக்கையிலும் மெலிந்த நிலையிலான குழந்தைகள் கிடத்தப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகிவிட்டது.

எந்த உயிரை காப்பாற்றலாம், எதை விட வேண்டும் என்று தேர்ந்தெடுக்க வேண்டிய கொடிய நிலை வந்துவிட்டது என ஐநா அதிகாரிகளே மனமுடைந்து பதிவு செய்துள்ளனர்.

வரும் மழைப்பருவம் வழக்கமான மழைப்பொழிவை கொடுத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் மீளுவதற்கு மாதக்கணக்கில் ஆகும் என நிபுணர் கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த மீட்சி க்கு தேவையான உதவியைத்தான் அமெரிக்கா வெட்டி விட்டது.