சென்னை மெட்ரோ பாலத்தின் உறுதித்தன்மையை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் சிஎஸ்ஐஆர்
21 Mar 2026, 2:42 pm
<p><strong>சென்னை மெட்ரோ பாலத்தின் உறுதித்தன்மையை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் சிஎஸ்ஐஆர்</strong></p>
<p>சென்னை, மார்ச் 20 சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் 4-வது வழித் தடத்தில் (கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி) அமைந்துள்ள பாலத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர்-கட்ட மைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் என்.ஆனந்தவல்லி தெரி வித்துள்ளார். சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், பூந்தமல்லி முதல் நசரத்பேட்டை வரையிலான பகுதியில், தூண்கள் இல்லாத 65 மீட்டர் நீள முள்ள வளைவுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மெட்ரோ பாலங்களில் 10 முதல் 20 மீட்டருக்கு ஒரு தூண் இருக்கும் நிலையில், இந்த நீண்ட வளைவுப் பாலத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய ரயில்வே பாது காப்பு ஆணையம் கேட்டுக் கொண்டது. இதனடிப்படையில், மெட்ரோ ரயில்கள் செல்லும் போது தண்டவா ளங்களில் ஏற்படும் நெகிழ்வுத் தன்மையை நிகழ்நேரத்தில் கண்காணிக்க சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு ள்ளன. இந்த சென்சார்கள் மூலம் சிஎஸ்ஐஆர் மற்றும் மெட்ரோ நிர்வாகம் இணைந்து பாலத்தின் நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும். தற்போது சோதனை ஓட்டத்தின்போது 10 மி.மீ அளவு நெகிழ்வுத்தன்மை பதிவாகியுள்ளது; இது அதிகபட்சமாக 25 மி.மீ வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நிர்வாகத்து டன் 6 மாத கால ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்தப் பாலம் கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர, பரங்கிமலை - வேளச்சேரி பறக்கும் ரயில் பாலம், புதிய பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் மற்றும் ஆந்திராவின் போல வரம் அணை போன்ற முக்கியக் கட்டமைப்புகளின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஆனந்தவல்லி தெரி வித்தார்.</p>
