எர்ணாவூரில் காகங்கள் இறப்பு: பொதுமக்கள் அச்சம்
12 Feb 2026, 4:57 pm
<p><strong>எர்ணாவூரில் காகங்கள் இறப்பு: பொதுமக்கள் அச்சம்</strong></p>
<p>சென்னை, பிப். 12- திருவொற்றியூர் எர்ணாவூர் பகுதியில் காகங்கள் உயிரிழந்து வருவ தால் மக்கள் பீதி அடைந் துள்ளனர். தமிழ்நாடு முழு வதும் காகங்கள் திடீரென இறக்கின்றன. பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் செத்து மடிவதாக பொதுமக்கள் மத்தியில் அச்சம்ஏற்பட்டுள்ளது. இறந்தகாகங்களை மக்கள் கைகளால் தொடவேண்டாம் என்றும், ஆழமான பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் திருவொற்றியூர் எர்ணாவூர் பகுதியில் புதன்கிழமை மாலை ஆங்காங்கே காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதைப் பார்த்த பொது மக்கள் பறவைகள் காய்ச்சல் பரவியுள்ளது என்று அச்சம் அடைந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து வருகின்ற னர்.</p>
