கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வதந்தியால் பெட்ரோல் பங்குகளில் கூட்டம்
12 Mar 2026, 4:20 pm
<p><strong>கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வதந்தியால் பெட்ரோல் பங்குகளில் கூட்டம்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி,மார்ச்12- கள்ளக்குறிச்சி மாவட்டம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தியால், மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், புதனன்று முதல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என தகவல் பரவியது. இத னால், கள்ளக்குறிச்சி நகரம், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம்,சங்கராபுரம், திருக்கோவிலூர், உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்து வருகின்றனர். வாகன ஓட்டி கள் தங்களின் இருசக்கர வாகனங்கள், கார்கள், டிராக்டர்கள், மினி சரக்கு வாகனங்களில் முண்டி யடித்து கொண்டு பெட்ரோல், டீசலை நிரப்பி னர். மேலும், தங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசலை கேன்களில் நிரப்பி சென்றனர்.சில பங்குகளில் 25 லிட்டர் வாட்டர் கேன்க ளில் டாட்டா ஏசி வாக னத்தில் வந்து நிரப்பிச் சென்றது மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான வாகன ஓட்டிகள் பங்குகளில் குவிந்த தால், பெட்ரோல் பங்க் ஊழி யர்கள் திணறி வரு கின்றனர். எரிவாயு தட்டுப்பாடு போல பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் பெட்ரோல் விலை உயர்ந்து விடுமோ! என்ற அச்சத்தில் வாகன ஓட்டி கள் முண்டியடித்துக் கொண்டு பெட்ரோல் பங்கு களை படைஎடுக்கத் தொடங்கியுள்ளனர்.</p>
