தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தரமற்ற பூச்சிக்கொல்லியால் பயிர்கள் பாதிப்பு

27 Jan 2026, 3:28 pm
தரமற்ற பூச்சிக்கொல்லியால் பயிர்கள் பாதிப்பு
<p><strong>தரமற்ற பூச்சிக்கொல்லியால் பயிர்கள் பாதிப்பு</strong></p> <p>கோவை, ஜன. 27- அன்னூர் அருகே தரமற்ற மற்றும் &nbsp;தவறான பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தியதால் 10 ஏக்கர் பரப்பளவி லான வெங்காயப் பயிர்கள் கருகிய &nbsp;சம்பவம் அப்பகுதி விவசாயிகளி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த ஆயிக்கவுண்டன்புதூர் கிராமத் தைச் சேர்ந்த விவசாயி முருகசாமி. இவர் தனது தோட்டத்தில் வாழைக்கு &nbsp;ஊடுபயிராக சுமார் 10 ஏக்கர் பரப்பள வில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். பயிர் கள் வளர்ந்து வந்த நிலையில், &lsquo;நுனிக் கருகல்&rsquo; நோய் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இதற்காக ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள &lsquo;பண்ணாரி அம்மன் டிரேடர்ஸ்&rsquo; என்ற தனியார் மருந்து கடையில் ஆலோசனை பெற்று &nbsp;மருந்து வாங்கித் தெளித்துள்ளார். ஆனால், மருந்து தெளித்த சில நாட் களிலேயே பச்சையாக இருந்த வெங் காயப் பயிர்கள் அனைத்தும் முழுவது மாக கருகி காய்ந்துவிட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த விவ சாயி முருகசாமி, இதுகுறித்து கோவை &nbsp;மாவட்ட வேளாண்மைத் துறை அதி காரிகளுக்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பாதிப் படைந்த வெங்காய மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். ஆனால், ஆய்வகத்திற்கு அனுப்பி பத்து நாட்களுக்கு மேலாகியும் இது வரை எவ்வித முடிவுகளையும் அதி காரிகள் தெரிவிக்கவில்லை எனப் புகார் &nbsp;எழுந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவ சாயி முருகசாமி கூறுகையில்: &ldquo;தவறான மருந்தை பரிந்துரைத்த தனியார் மருந்து கடை உரிய பதில் அளிக்க மறுக்கிறது. அதிகாரிகளும் ஆய்வு செய்கிறோம் என்று கூறிவிட்டு காலம்தாழ்த்தி வருகின்றனர். பல லட் சம் ரூபாய் செலவு செய்து வளர்த்த &nbsp;பயிர்கள் கண்முன்னே கருகிவிட்டன. &nbsp;எனவே, அரசு தலையிட்டு சம்பந்தப் பட்ட கடை மீதும், மெத்தனமாக செயல் படும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண் டும்,&rdquo; என கண்ணீருடன் தெரிவித்தார். தனியார் மருந்து கடைகளின் லாப &nbsp;நோக்கத்திற்காக தரமற்ற அல்லது &nbsp;தவறான மருந்துகளை பரிந்துரைப் பதை கட்டுப்படுத்த வேளாண் துறை &nbsp;தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் &nbsp;என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.