முந்தய பக்கம்

பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திடுக

2 hours before
பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திடுக

பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திடுக

மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், ஆக. 6–விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கருமந்துறை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றி, சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வியாழனன்று சேலம் மாவட்டம், கருமந்துறை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க நிர்வாகி வீ.சின்னமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.பொன்னுசாமி, மாநிலக் குழு உறுப்பினர் என்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், சங்க செயலாளர் தர்மலிங்கம், சிபிஎம் செயலாளர் பாக்யராஜ், சங்க பொருளாளர் சி.வெங்கடேசன் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram