விவசாய நிலத்தில் பயிர் அறுவடை ஆய்வு
20 Feb 2026, 2:39 pm
<p><strong>விவசாய நிலத்தில் பயிர் அறுவடை ஆய்வு</strong></p>
<p>பாபநாசம், பிப்.20- ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்களால், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, விவசாய நிலத்தில் பயிர் அறுவடை ஆய்வு நடைபெற்றது. பயிர்களின் மகசூல் அளவை விஞ்ஞான ரீதியில் கணக்கிட, மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தை வழங்க ஆய்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, கல்லூரி இயக்குநர் பாண்டியராஜன், இத்தகைய புல ஆய்வுகள் வேளாண்மை கல்வியில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார். ஆய்வின் ஒருங்கிணைப்பாளர்களாக சுந்தரவடிவு (உதவிப் பேராசிரியர் வேளாண் விரிவாக்கத்துறை), அருண்குமார் (உதவிப் பேராசிரியர் வேளாண் விரிவாக்கத்துறை) செயல்பட்டனர். குழு வழிகாட்டிகளாக பேராசிரியர்கள் விஜய் சாரதி (வேளாண் பொருளியல் இணைப் பேராசிரியர்) மற்றும் ராஜேஷ் (உழவியல் உதவிப் பேராசிரியர்) ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினர். இதில், இறுதி ஆண்டு மாணவர்கள் பிரதீப்ராஜ், நம்பிராஜு, பொன் லோகேஸ்வரன், நவீன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் குறிப்பிட்ட பரப்பளவில் பயிர்களை அறுவடை செய்து, எடைபோட்டு, ஒரு ஹெக்டேருக்கு மகசூல் கணக்கீடு செய்தனர்.</p>
