முந்தய பக்கம்

அமராவதி ஆற்றில் முதலை உலா!

7 Dec 2025, 3:52 pm
அமராவதி ஆற்றில் முதலை உலா!
<p><strong>அமராவதி ஆற்றில் முதலை உலா!</strong></p> <p>உடுமலை, டிச.7- மடத்துக்குளம் அருகே பாயும் அமராவதி ஆற்றில் முதலை உலா வருவதால், அப்பகுதி மக்கள் அச்சம டைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, கணியூர் கடத்தூர் பிரதான சாலையிலுள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தின் அருகே &nbsp;நீரில் பெரிய அளவிலான &nbsp;முதலை ஒன்று படுத்திருப் பதை அவ்வழியாக சென் றவர்கள் பார்த்துள்ள னர். அதனை வீடியோவாகவும் பதிவுசெய்த நிலையில், &nbsp;தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வரு கிறது. தற்பொழுது சபரிமலை சீசன் என்பதால், ஆற்றில் &nbsp;காலை, மாலை என இருவேளையும் ஏராளமான பக்தர்கள் &nbsp;நீராடி வருகின்றனர். மேலும், தினசரி பொதுமக்கள் குளிப்ப தற்கு, துணி துவைப்பதற்கு மற்றும் மாடு மேய்ப்பதற்கு ஆற் றுப்பகுதிக்கு சென்று வருகின்றனர். ஆற்றில் உலா வரும் &nbsp;முதலையால் அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சமடைந்துள்ள னர். எனவே, யாரையேனும் தாக்கும் முன் அதனை &nbsp;வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் &nbsp;கோரிக்கை விடுத்துள்ளனர். தற்பொழுது, கடத்தூர் ஊராட்சி &nbsp;சார்பில் ஆற்றுப்பகுதியில் முதலை உலா வருவது &nbsp;குறித்து ஒலிபெருக்கியின் மூலம் அறிவுறுத்தப்பட்டு வரு கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram