கோதையாற்றில் மீண்டும் முதலை
2 Sept 2026, 10:54 pm

கோதையாற்றில் மீண்டும் முதலை

அருமனை, செப். 2-குமரி மாவட்டம் திற்பரப்பு கோதையாற்றில் ராட்சத முதலை நடமாட்டம் இருப்பதை பல மாதங்களுக்கு முன்னால் கண்டறியப்பட்டு அதனைப் பிடிப்பதற்கு வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஆனால் அந்த முதலையானது பிடிபடாமல் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தது. இதைத்தொடர்ந்து சில மாதங்களாக முதலையைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் கோதையாற்றில் மீண்டும் முதலை தென்பட்டுள்ளது. இதனை வன ஆர்வலர் ஒருவர் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார்.

கோதையாற்றில் முதலை இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆற்றின் குறிப்பிட்ட பகுதிகளில் முதலை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் திங்கட்கிழமை முதலை ஒன்று ஆற்றின் கரையை கடந்து சென்றதாகவும், அதனை வன ஆர்வலர் ஒருவர் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முதலை மீண்டும் தென்பட்டுள்ளதால், கோதையாற்றில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஆற்றில் இறங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.