முந்தய பக்கம்

தம்பரம் அருகே குளத்தில் மீன்பிடி வலையில் சிக்கிய முதலை

7 Dec 2025, 3:52 pm
தம்பரம் அருகே குளத்தில் மீன்பிடி வலையில் சிக்கிய முதலை
<p><strong>தம்பரம் அருகே குளத்தில் மீன்பிடி வலையில் சிக்கிய முதலை</strong></p> <p>சிதம்பரம், டிச.7- சிதம்பரம் அருகே கிராம குளத்தில் மீன் பிடித்தபோது மீன்பிடி வலையில் முதலை சிக்கியது. இதை பத்திரமாக வனத்துறையினர் மீட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் பொதுமக்கள் குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகளைக் கழுவுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை குளத்தில் அப்பகுதி மக்கள் இறங்கி மீன்பிடி வலையைக் கொண்டு மீன் பிடித்தனர். அப்போது அந்த வலையில் சுமார் 5 அடி நீளமும், 30 கிலோ எடையும் கொண்ட முதலைக் குட்டி ஒன்று சிக்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வலையுடன் கரைக்கு இழுத்து வந்து முதலையின் முகத்தை மறைத்து கயிற்றால் கட்டி வைத்தனர். பின்னர் இது குறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் முதலையை மீட்டு சிதம்பரம் அருகே உள்ள வக்கராமரி ஏரியில் விட்டனர். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அந்த குளத்தில் முதலை இருந்ததைப் பிடித்ததை அறிந்து நிம்மதி அடைந்தனர். மேலும் குளத்தில் இன்னும் பெரிய முதலை இருப்பதாகவும், முதலையால் பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் அதைப் பிடிக்க வேண்டும் என்றும்&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram