தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

5 Nov 2026, 10:20 pm
விளையாட்டு

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வு

கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரும், போர்ச்சுக்கல் தேசிய அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ (41) சர்வதேச கால்பந்து போட்டி களில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

‘பால் பாய்’ முதல் சாதனை வரை

போர்ச்சுக்கல் நாட்டின் தீவுப் பகுதியான மதீராவில் ஒரு எளிய குடும்பத்தில் 1985ஆம் ஆண்டு பிறந்தவர் கிறிஸ்டி யானோ ரொனால்டோ. தந்தை ஒரு தோட்டக்காரர், தாய் சமையல் தொழிலாளி. கால்பந்து பயிற்சி பெறத் தலை

நகர் லிஸ்பனுக்குச் சென்றார். அங்குப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தபோதே, வறுமை காரணமாக முதன்மை அணிகளின் போட்டிகளின் போது மைதானத்திற்கு வெளியே சென்று பந்துகளை எடுத்துத் தரும் ‘பால் பாய்’ ஆகப் பணியாற்றினார்.

இதற்கிடையே இதயத் துடிப்புப் பிரச்சனை காரணமாக 15ஆவது வயதில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், கால்பந்து விளையாடும் தனது கனவைக் கைவிடாமல் மீண்டும் தீவிரப் பயிற்சிக்குத் திரும்பினார். 1992ஆம் ஆண்டு முதல் சிறுவர் அணிப் பிரிவில் விளையாடிய ரொனால்டோ, 2001ஆம் ஆண்டு கிளப் மற்றும் போர்ச்சுகல் ஜூனியர் தேசிய அணியிலும், 2003ஆம் ஆண்டு தனது 18ஆவது வயதில் போர்ச்சுக்கல் தேசிய அணி மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து கிளப்) ஆகிய முன்னணி அணிகளிலும் விளையாடத் தொடங்கினார்.

பாலன் டி ஆர்

பல்வேறு சறுக்கல்களுக்கு இடையே 2004ஆம் ஆண்டு முதல் கால்பந்து உலகின் தலைசிறந்த அதிரடி வீரராக ரொனால்டோ உருவெடுத்தார். போர்ச்சுகல் அணியை வழிநடத்தி 2016இல் யூரோ கோப்பையையும், 2019 மற்றும் 2025 ஆகிய ஆண்டு களில் யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்று கொடுத்துவரலாற்றுச் சாதனை படைத்தார். அதேபோல சர்வதேசக் கால்பந்து வரலாற்றில் 234 போட்டிகளில் விளையாடி 146 கோல்களை அடித்து, அதிக போட்டிகள் மற்றும் அதிக கோல்கள் அடித்த வரலாற்று நாயகனாக உருவெடுத்தார். உலகளவில் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் உயரிய ‘பாலன் டி ஆர்’ விருதை 5 முறை வென்றுள்ளார்.

உணர்ர்ச்சிப்பூர்வமான ஓய்வு அறிவிப்புஇந்நிலையில், 23 ஆண்டுகால மகத்தான சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்குப் பிறகு, தனது 41ஆவது வயதில் போர்ச்சுகல் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக ரொனால்டோ அறிவித்தார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் அவர் வெளியிட்ட அறிவிப்பில், “போர்ச்சுக்கல் மக்களுக்கு, நான் 7ஆம் எண் ஜெர்சியை தேசிய அணிக்கு அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது எனக்கானது மட்டும் அல்ல. கடந்த 23 வருடங்களாக நான் இந்த ஜெர்சியை அணிந்ததை கௌரவமாகக் கருதுகிறேன். தற்போது அதனைத் திருப்பி அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது எளிதான முடிவு அல்ல; இது எனது இதயத்திலிருந்து எடுக்கப்பட்ட முடிவு” எனத் தெரிவித்துள்ளார்.

அல் நாசர்

ரொனால்டோ 6 ஐரோப்பா சாம்பியன்ஷிப் போட்டிகளிலும், 5 பிபா உலகக்கோப்பைத் தொடர்களிலும் விளையாடியிருந்தாலும், அவர் பங்கேற்ற போர்ச்சுக்கல் அணி ஒருமுறை கூட உலகக் கோப்பையை வென்றதில்லை. இது ரசிகர்களின் நிறைவேறாத ஆசையாகவே உள்ளது. சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் தற்போது விளை யாடி வரும் அல் நாசர் (சவூதி கிளப்) கிளப் அணிக்காகததொடர்ந்து விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஓபன் டென்னிஸ் : மாயா ராஜேஸ்வரன் சாதனை

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசையில் 669ஆவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் மாயா ராஜேஸ்வரன் 277ஆவது இடத்திலிருக்கும் போலந்து நாட்டின் பல்கோவ்ஸ்காவை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி ‘டபிள்டிஏ 250’ தொடரின் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் சானியா மிர்சா கடைசியாக 2012ஆம் ஆண்டு பட்டாயா ஓபன் (தாய்லாந்து) தொடரில் காலிறுதிக்கு முன்னேறியிருந்த நிலையில், தற்போது மாயாவின் இந்த சாதனை இந்திய மகளிர் டென்னிஸில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.