தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்த முடிவு எளிதானதல்ல!

33 minutes before
இந்த முடிவு எளிதானதல்ல!

இந்த முடிவு எளிதானதல்ல!

கால்பந்து உலகில் நூற்றுக்கணக்கான வீரர்கள் இருந்தாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர்களில் ஒரு சில நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளனர். அந்த வரிசையில் மிக முக்கியமானவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அசூர வேகத்தில் கோலடிக்கும் திறன்,2.93 மீட்டருக்கும் அதிகமான அளவில் தாவி கோலடிக்கும் திறன், சிறப்பான உடல் தகுதி, விடாமுயற்சி என பல்வேறுதிறமைகளால் கால்பந்து உலகில் தனக்கென

ஒரு சகாப்தத்தை உருவாக்கியவர் ரொனால்டோ.

2026 நவம்பர் 5ஆம் தேதி போர்ச்சுக்கல் தேசிய அணியில் இருந்து சர்வதேச ஓய்வை அறிவித்தபோது, அவரது 23 ஆண்டுகால சர்வதேச பயணம் முடிவுக்கு வந்தது. போர்ச்சுக்கல் அணிக்காக 234 போட்டிகளில் விளையாடி 146 கோல்கள் அடித்துள்ள அவர், ஆடவர் சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடியவர் மற்றும் அதிக கோல்கள் அடித்தவர் என்ற உலகசாதனைகளுடன் விடைபெற்றார்.

மதீராவில் தொடங்கிய வாழ்க்கை

கிறிஸ் டியானோ ரொனால்டோ டோஸ் சான்டோஸ் அவெய்ரோ 1985 பிப்ரவரி 5ஆம் தேதி போர்ச்சுக்கலின் மதீராதீவில் உள்ள பஞ்சால் நகரில் பிறந்தார். குடும்பத்தின் பொருளாதார நிலை வசதியானதாக இருக்கவில்லை. மூன்றுஉடன்பிறந்தவர்களுடன் வளர்ந்த ரொனால்டோ, சிறுவயதிலேயே கால்பந்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.அவரது தந்தை கால்பந்து கிளப்பில் பணியாற்றியவர்; தாய் குடும்பத்தை நடத்த சமையல் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டார். சிறுவயதிலிருந்தே கால்பந்து விளையாடுவதில் ஆர்வம்கொண்ட ரொனால்டோவின் திறமை, வயதுஅதிகரிக்க அதிகரிக்க வெளிப்படத் தொடங்கியது.

12 வயதில் வாழ்க்கையை மாற்றிய முடிவு

ரொனால்டோவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் அவரது 12ஆவது வயதில்ஏற்பட்டது. மதீராவில் இருந்து லிஸ்பனுக்கு சென்று ஸ்போட்டிங் கிளப்பின் அகாடமியில் இணைந்தார்.சிறுவயதிலேயே குடும்பத்தை விட்டு தொலைதூர நகரத்துக்குச் செல்வதுஅவருக்கு எளிதான விஷயமாக இருக்கவில்லை.

உடல்நலப் பிரச்சனை

ரொனால்டோவின் ஆரம்ப கால்பந்து வாழ்க்கையில் இன்னொரு பெரிய சவாலும் ஏற்பட்டது. இளம் வயதில் இதயத் துடிப்பு தொடர்பான பிரச்சனை அவருக்கு ஏற்பட்டது. இதற்காக மருத்துவ சிகிச்சையும் அறுவைச் சிகிச்சையும்மேற்கொள்ளப்பட்டது. அச்சூழ்நிலையில் அவரது கால்பந்து கனவு பாதிக்கப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால் ரொனால்டோ சிகிச்சைக்குப் பிறகுமீண்டும் பயிற்சிக்குத் திரும்பினார். தனது உடல்நலப் பிரச்சனையை காரணமாக கொண்டு கால்பந்து கனவைகைவிடாமல் தொடர்ந்து முன்னேறினார்.ஸ்போர்ட்டிங் டூ உலக அரங்குஸ்போர்ட்டிங் அணியின் (போர்ச்சுக்கல்) இளையோர் அமைப்பில் வளர்ந்த ரொனால்டோ, 2002ஆம் ஆண்டு தனது சீனியர் அணியில் அறிமுகமானார். அப்போது அவர் இன்னும் இளம் வீரர். ஆனால் அவரது வேகம், பந்தை கடத்தும் திறன், எதிரணி வீரர்களை கடந்து செல்லும் திறன் ஆகியவைஅவரை விரைவாக கவனிக்கப்படும் வீரராக மாற்றின.அதன் பிறகு 2003 ஆகஸ்டில் 18 வயதில்மான்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்தார். அதே ஆண்டில் ஆகஸ்ட் 20ஆம் தேதி போர்ச்சுக்கல் தேசிய அணிக்காக அறிமுகமானார்.

மான்செஸ்டர் யுனைடெட்டில் உருவான ‘சிஆர்7’

மான்செஸ்டர் யுனைடெட்டில் சேர்ந்தபோது ரொனால்டோ ஒரு வேகமான, திறமையான விங்கராக இருந்தார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் அவர் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார். இளம் விங்கராக வந்தவர்,

பின்னர் உலகின் மிகச்சிறந்த கோல் அடிக்கும் வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார். 2007-08சீசன் அவரது கிளப் போட்டிகளின் வாழ்க்கை புதிய உச்சமாக அமைந்தது. அந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் 42 கோல்கள் அடித்தார். மேலும் மான்செஸ்டர் யுனைடெட் பிரீமியர் லீக் மற்றும் ஐரோப்பா கிளப் சாம்பயன்ஸ் லீக் ஆகிய இரு முக்கிய கோப்பைகளையும் வென்றது. அதேஆண்டில் உலகின் சிறந்த வீரருக்கான பாலன் டி’ஆர் (Ballon d’Or) விருதையும் முதல் முறை

யாக வென்றார்.

ரியல் மாட்ரிட்2009ஆம் ஆண்டு ரொனால்டோ ரியல்மாட்ரிட் (ஸ்பெயின் கிளப்) அணிக்கு மாறினார். ரியல் மாட்ரிட் அணியில் 9 ஆண்டுகள் விளையாடிய அவர், அக்கிளப்பின் வரலாற்றிலேயே அதிக கோல்கள் அடித்த வீரராக மாறினார். 438 போட்டிகளில் 451கோல்கள் அடித்தார். நம்ப முடியாத வகையில், ஒரு போட்டிக்கு சராசரியாக ஒரு கோலுக்கு மேல் என்ற அளவில்அவரது கோல் சாதனை இருந்தது. ரியல் மாட்ரிட் அணிக்காக 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், 2 லாலிகாபட்டங்கள், 3 கிளப் உலகக்கோப்பை பட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோப்பைகளை வென்றார். போர்ச்சுக்கல் அணியின் உயர்வுகிளப் கால்பந்தில் சாதனைகள் படைத்துக் கொண்டிருந்தபோதும்,ரொனால்டோவின் மிகப்பெரிய கனவுபோர்ச்சுக்கல் தேசிய அணிக்காக ஒரு பெரிய கோப்பையை வெல்வதாகஇருந்தது. 2004ஆம் ஆண்டு தனது முதல் பெரிய ஐரோப்பியசாம்பியன்ஷிப் (யூரோ) தொடரில் விளையாடியரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி இறுதிப்போட்டி வரைசென்றது. ஆனால் கிரீஸ் அணியிடம் போர்ச்சுக்கல்தோல்வியடைந்தது.அதன்பிறகு பல ஆண்டுகள் காத்திருந்த அவர் 2016ஆம் ஆண்டு அந்த கனவு நனவானது.பிரான்சில் நடைபெற்ற யூரோ இறுதி போட்டியில் போர்ச்சுக்கல் அணி பிரான்சை வீழ்த்தி முதல்முறையாகஐரோப்பிய சாம்பியனானது.

இறுதி போட்டியில் காயம் காரணமாக ரொனால்டோ நீண்ட நேரம் விளையாட முடியாநிலையிலும், அணியின் அருகில் இருந்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். அந்த வெற்றி போர்ச்சுக்கல் கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய தருணங்களில் ஒன்றாக அமைந்தது. 2019ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் ஐரோப்பா நேஸ்ன்ஸ் லீக் (Nations League) தொடரிலும் சாம்பியனானது. பின்னர் 2025ஆம் ஆண்டிலும் நேஸ்ன்ஸ் லீக் தொடரிலும் பட்டத்தை வென்றது. இதனால் போர்ச்சுக்கல் அணிக்காக யூரோ மற்றும் இரண்டு நேஸ்ன்ஸ் லீக் கோப்பைகளை வென்ற கேப்டனாக ரொனால்டோ வரலாற்றில் இடம்பிடித்தார்.

உலகக்கோப்பையில் தனித்துவமான சாதனை

ரொனால்டோ 2006ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 6 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடினார். 2006 இல் 21 வயதில் உலகக்கோப்பையில் தனதுமுதல் கோலைஅடித்தார். 2018ஆம் ஆண்டு ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் அடித்தார்.அப்போட்டியில் 33 வயதில் ஹாட்ரிக் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் வயதான ஹாட்ரிக்வீரர்களில் ஒருவராகவும் சாதனை படைத்தார்.

மிக முக்கியமாக, 6 வெவ்வேறு உலகக்

கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார். 2026 உலகக்கோப்பை வரை அவரது கோல்கள் (உலகக்கோப்பை) 11 ஆக உயர்ந்தன.

அலி தாயியின் சாதனையை முறியடித்த தருணம்

ரொனால்டோவின் சர்வதேச வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று 2021ஆம் ஆண்டு நிகழ்ந்தது. ஈரான் முன்னாள் வீரர் அலி தாயி 109 சர்வதேச கோல்கள் அடித்து நீண்ட காலமாக உலக சாதனையை தன்வசம் வைத்திருந்தார். 2021 செப்டம்பர் 1ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த ரொனால்டோ, அலி தாயியின் சாதனையை முறியடித்தார்.

ஜூவண்டஸ் மற்றும் சவூதி அரேபியா பயணம்

2018ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட்டில் இருந்து இத்தாலியின் ஜூவண்டஸ் அணிக்கு ரொ

னால்டோ மாறினார். அங்கு இரண்டு சீரிஸ் ஏ பட்டங்களை வென்றார். 2020-21 சீசனில் சீரிஸ் ஏ-வின் அதிக கோல் அடித்த வீரராகவும் இருந்தார். ஜூவண்டஸ் அணிக்காக 134 போட்டி

களில் 101 கோல்கள் அடித்தார்.

5 பாலன் டி’ஆர்

ரொனால்டோ தனது வாழ்க்கையில் 5 முறை பாலன் டி’ஆர் விருதை வென்றுள்ளார். மான்செஸ்டர் யுனைடெட்டுக்காக விளையாடியபோது 2008இல் முதல் முறையாக இந்த விருதை வென்றார். ரியல் மாட்ரிட் காலகட்டத்தில் மேலும் 4 முறை இந்தவிருதை வென்று, உலகின் தலைசிறந்த வீரர்களில் தனது இடத்தை உறுதி செய்தார்.

நிறைவேறாத ஒரு கனவு

இத்தனை சாதனைகள் இருந்தபோதும் ரொனால்டோவின் வாழ்க்கையில் நிறைவேறாத ஒரு முக்கியமான கனவு உள்ளது உலகக்கோப்பையை வெல்வது. அவர் 6 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளார். ஆனால் போர்ச்சுக்கல் அணிஒருமுறை கூட உலகக் கோப்பையை வெல்லவில்லை. இதுவே அவரது சர்வதேச வாழ்க்கையின் மிகப்பெரிய நிறைவேறாத ஆசையாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒரு வீரராக போர்ச்சுக்கல் அணியின் வரலாற்றையே மாற்றியவர் என்ற பெருமையை அவர்பெற்றுள்ளார்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு விடை

2003 ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கிய ரொனால்டோவின் போர்ச்சுக்கல் பயணம் 2026 இல் முடிவுக்கு வந்தது. ஓய்வு அறிவிப்பில், தேசிய அணியின் 7ஆம் எண் ஜெர்சியை அடுத்ததலைமுறைக்கு வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். அந்த ஜெர்சி தனக்கு மட்டும் சொந்தமானது அல்லஎன்றும், 23 ஆண்டுகளாக அதை அணிந்து, பாதுகாத்து, உலகின் பல்வேறு மைதானங்களுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகக் கருதுவதாகவும் கூறினார்.

“இந்த முடிவு எளிதானது அல்ல; சில முடிவுகள் மனதால் எடுக்கப்படுகின்றன” என்ற உணர்வுடன் தனது சர்வதேச வாழ்க்கைக்கு அவர் விடை கொடுத்தார். ரொனால்டோ என்ற பெயர் இனி ஒரு வீரரின் பெயராக மட்டுமல்ல; சாதனை, விடாமுயற்சி மற்றும் நீண்ட கால உழைப்பின் அடையாளமாகவும் கால்பந்து உலகில் நினைவுகூரப்படும். ஆசாத்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.