முந்தய பக்கம்

‘வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தால் குற்றவியல் நடவடிக்கை’

28 Jan 2026, 2:33 pm
‘வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தால் குற்றவியல் நடவடிக்கை’
<p><strong>&lsquo;வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தால் குற்றவியல் நடவடிக்கை&rsquo;</strong></p> <p>தேனி, ஜன.28- சின்னமனூர் வனப்பகுதியில் கோடை காலத்தில் ஏற்படும் தீ &nbsp;விபத்துக்களைத் தடுக்க தீவிர நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் படி அத்துமீறி மலைப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது குற்றவியல் நட வடிக்கை எடுக்கப்படும் என்று வனத் &nbsp;துறையினர் தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் வருசநாடு, மேக மலை, கூடலூர், கம்பம், போடி, பெரி யகுளம் பகுதிகளில் அமைந்துள் ளன. ஒவ்வொரு கோடையிலும் ஏற் &nbsp;படும் தீ விபத்து அதிக பாதிப்யை ஏற்படுத்துகிறது. &nbsp;இது போன்ற நிலையைத் தடுப்ப தற்காக சின்னமனூர் வனச்சரக அலு வலகத்தில் வனப்பணியாளர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. &nbsp;உதவி வனப் பாதுகாவலர் சாய் &nbsp;சரண்ரெட்டி தலைமை வகித்தார். தீயை கட்டுப்படுத்தும் கருவிகளான பயர்மேட், தெளிப்பான், பிரத்யேக உடைகள் உள்ளிட்டவை வழங்கப் பட்டன. &nbsp;மேகமலை பகுதியில் தீ பரவ &nbsp;வாய்ப்புள்ளதால் 3 மீட்டர் அகலத்தி லும், தமிழக கேரள எல்லையோரம் 6 மீட்டர் அகலத்துக்கும் சுமார் 110 கிமீ.தூரத்துக்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. விரைவில் இவை நிறைவு பெற &nbsp;உள்ளன என்று வனத்துறையினர் தெரிவித்தனர். தீ விபத்துக்கள் பெரும்பாலும் மனித தவறுகளாலே ஏற்படுவதால் &nbsp;கோடையில் அத்துமீறி வனப்பகு திக்குள் நுழைந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பயிற்சியில் சின்னமனூர், கம் &nbsp;பம் கிழக்கு வனச்சரகர்கள் திருமுரு கன், பிச்சைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram