மனிதனின் செல்களில் இருந்து புற்றுநோய் எதிர்ப்பு செல்களை உருவாக்கி சிகிச்சை
3 Mar 2026, 3:38 pm
<p><strong>மனிதனின் செல்களில் இருந்து புற்றுநோய் எதிர்ப்பு செல்களை உருவாக்கி சிகிச்சை </strong></p>
<p>சென்னை, மார்ச் 3- முற்றிய புற்றுநோய்க்கு உடலில் இருக்கும் செல்களை கொண்டே நவீன நோய் எதிர்ப்பு சிகிச்சையை சென்னையை சேர்ந்த மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. முன்னேறிய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சிகிச்சைக்கு சமீ பத்தில்தான் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. இதன் பெயர் கார்-டி செல் சிகிச்சை என்பதாகும். புற்றுநோய் சிகிச்சையில் ஒரு திருப்புமுனையாக கருதப்படும் இந்த கார்-டி செல் சிகிச்சையில், நோயாளியின் சொந்த நோயெதிர்ப்பு செல்களே புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்படுகின்றன. வழக்கமான கீமோ தெரபி சிகிச்சைகள் பலன ளிக்காத மற்றும் புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை புற்று நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்று எம்ஜிஎம் புற்றுநோய் மருத்துவமனையின் புற்று நோயியல் துறை இயக்குநர் டாக்டர் எம்.ஏ.ராஜா கூறி னார். கார்-டி சிகிச்சை முறையை திட்டத்தைப் பயன்படுத்தி, தீவிர புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி களின் உயிரைக் காப்பாற்றி இந்த உத்தியின் ஆற்றலை வெற்றிகரமாக நிரூ பித்துள்ளனர் என்று அடை யாறு மலர் மருத்துவ மனையின் முதுநிலை ஆலோசகர் டாக்டர் சுமன் கல்யாண் தெரிவித்தார். இச்சிகிச்சை உத்தியி னால் பயனடைந்தவர்களில் ஒருவரான 70 வயது முதியவர், எட்டு மாதங்க ளுக்கும் மேலாக ‘லிம்போமா’ எனப்படும் நிணநீர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இருந்த இதயப் பிரச்சினைகள் காரணமாக முழு அளவிலான கீமோ தெரபி சிகிச்சை அளிக்க முடியாத சிக்கல் இருந்தது. இதனால் இந்த புதிய சிகிச்சை அளிக்கப்பட்டு குணப் படுத்தப்பட்டது என்று ஹீமாடோ புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் எம்.கோபிநாதன் கூறினார்.</p>
