கேரளாவைப் போல் ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் மதுரை மாநாட்டில் சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்
28 Dec 2025, 2:16 pm
<p><strong>கேரளாவைப் போல் ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் மதுரை மாநாட்டில் சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்</strong></p>
<p>மதுரை, டிச. 28- “ஒன்றிய அரசு பொதுத்துறை நிறு வனங்களை அழித்து வரும் சூழலில், கூட்டுறவு அமைப்புகளைப் பாதுகாக்க வும் வலுப்படுத்தவும் கேரள மாடலைப் பின்பற்றி ‘தமிழ்நாடு வங்கி’யை உரு வாக்க வேண்டும்” என மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு மதுரையில் சனியன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சு. வெங்க டேசன் எம்.பி. உரையாற்றினார். கூட்டுறவு அமைப்புகள் - ஜனநாயகத்தின் கேடயம் கூட்டுறவு அமைப்புகள் என்பது வெறும் நிதி நிறுவனங்கள் மட்டுமல்ல, அவை ஜனநாயகக் காலத்தில் உரு வான மிகச் சிறந்த நிறுவன வடிவங்கள் என்று சு. வெங்கடேசன் புகழாரம் சூட்டி னார். “இன்று நிதி அமைப்புகள் அனைத்தும் பெரும் முதலாளிகளுக் காகவும், கார்ப்பரேட் நலன்களுக்காக வும் மாற்றப்பட்டு வருகின்றன. நாடாளு மன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொட ரிலும் ஒரு பொதுத்துறை நிறுவனமோ அல்லது காப்பீட்டு நிறுவனமோ அழிக்கப்படாமல் அந்த அமர்வு நிறைவு பெறுவதில்லை. இந்தச் சூழலில், இருப்பவற்றைப் பாதுகாப்பது நமது வரலாற்றுப் பணி” என்றார். கேரளாவின் வெற்றி - தமிழகத்திற்கான பாதை கேரள கூட்டுறவு வங்கியின் சாதனைகளைச் சுட்டிக்காட்டிய அவர், “ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறைச் சட்டங்கள் மூலம் அதிகாரங்களைக் குவிக்க முயன்றபோது, அதற்குப் போட்டியாக மாநில அளவிலான வங்கியை உருவாக்கி இந்தியாவிற்கே கேரளா முன்மாதிரியாக மாறியுள்ளது. இன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவு வங்கியாக அது திகழ்கிறது. 500 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனையை நடத்தும் அளவிற்கு அந்த வங்கி உயர்ந்துள் ளது. கேரளாவால் முடியும் போது, அதைவிட இருமடங்கு கிளைகளும் கூடுதல் வைப்புத்தொகையும் கொண்ட தமிழ்நாட்டால் ஏன் முடியாது? ‘தமிழ்நாடு வங்கி’ என்ற கனவு ஒரு வலி மையான மக்கள் இயக்கமாக மாற வேண்டும்” என அறைகூவல் விடுத்தார். அரசு நிதியும் தனியார் வங்கிகளும் அரசு அலுவலகங்களின் கணக்கு கள் தனியார் வங்கிகளில் இருப்பதை அவர் கடுமையாகச் சாடினார். “90 சதவீத கல்விக் கடன்களை அரசு வங்கி கள் வழங்குகின்றன. ஆனால், மாநக ராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலு வலகங்களின் பெரும் நிதி, தனியார் வங்கிகளில் முடங்கிக் கிடப்பது ஏன்? அரசுப் பணத்தைத் தனியார் வங்கி களில் வைப்பது சந்தேகத்தை ஏற்படு த்துகிறது. அனைத்து அரசு நிதிப் பரிவர்த்தனைகளும் கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகள் மூலமே நடைபெற வேண்டும். இது ஊழியர்களுக்கான கோரிக்கை மட்டுமல்ல, மக்களின் வரிப்பணம் மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற அடிப்படை உரிமை” என விளக்கினார். ஒருங்கிணைந்த வங்கி முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலை வர் தி.தமிழரசு, கூட்டுறவு வங்கி களின் நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் தீர்வு களை முன்வைத்தார்: ஒரே சாஃப்ட்வேர் - ஒரே நிர்வாகம்: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களை இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்கினால், தொழில் நுட்பச் செலவுகள் குறைந்து நிர்வாகம் சீராகும். இதன் மூலம் விவசாயி களுக்கு 5.5 சதவீதத்திற்கும் குறை வான வட்டியில் அதிக கடன் வழங்க முடியும். மூலதன வலிமை : இப்போது தனித்தனி வங்கிகளாக இருப்பதால் ரூ.60,000 கோடி டெபாசிட் கூட திரட்ட முடிவதில்லை. ஆனால் ஒன்றிணைந் தால், ஆரம்ப மூலதனமே ஒன்றரை லட்சம் கோடியைத் தாண்டும். நகர வங்கிகளின் நெருக்கடி: தமிழகத் தில் உள்ள 127 நகரக் கூட்டுறவு வங்கி கள் மீது ரிசர்வ் வங்கி விதிக்கும் கடும் கட்டுப்பாடுகளால் அவற்றின் உரி மங்கள் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க 15 மண்டலங்களாகப் பிரித்து அவற்றை வலுப்படுத்த வேண்டும். அரசுக்கு வேண்டுகோள்: “நாங்கள் மாநில அரசின் உற்ற நண்பர்கள். அர சுத் திட்டங்களை முன்னின்று செயல் படுத்துகிறோம். ஆனால், நகைக் கடன் தள்ளுபடிக்கான வட்டித் தொகையை அரசு வங்கிகளுக்கு வழங்குவதில்லை. இதனால் வங்கிகள் நிதி இழப்பைச் சந்திக்கின்றன. ஊழியர்களுக்கு முறை யான ஊதிய உயர்வு மற்றும் 10,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க அரசு முன் வர வேண்டும்” எனத் தெரிவித்தார். தேர்தல் வரவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் ‘தமிழ்நாடு வங்கி’ உருவாக்கத்தை ஒரு முக்கிய அம்சமாகச் சேர்க்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது. திமுக அரசானது, தொழிலாளர் நலன் மற்றும் கூட்டுறவுத் துறை மேம்பாட்டில் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும் என ஊழியர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில் ஞாயிறன்று சிஐடியு துணைத் தலைவரும் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க சிறப்புத் தலைவருமான அ.சவுந்தரராசன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநிலத் துணை தலை வர் எம்.ராஜகேசரி நன்றி கூறினார். மாநாட்டில் சங்கத்தின் சிறப்புத் தலைவராக அ.சவுந்தரராசன், தலைவராக தி.தமிழரசு, பொதுச் செய லாளராக இ.சர்வேசன், துணைப் பொதுச் செயலாளராக வி.ஹரி கிருஷ்ணன், பொருளாளராக கே. கோவிந்தராஜ் உள்ளிட்ட 31 நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
