தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேத்தூர் ‘மரணச்சாலை’ சீரமைப்பு சிபிஎம் போராட்டம் வெற்றி

5 Jan 2026, 6:21 pm
சேத்தூர் ‘மரணச்சாலை’ சீரமைப்பு சிபிஎம் போராட்டம் வெற்றி
<p><strong>சேத்தூர் &lsquo;மரணச்சாலை&rsquo; சீரமைப்பு சிபிஎம் போராட்டம் வெற்றி</strong></p> <p>இராஜபாளையம், ஜன.5- திருமங்கலம் முதல் கொல்லம் வரை &nbsp;நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகளின் தொடர்ச்சியாக, இராஜ பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலு வலகம் முதல் சொக்கநாதன் புத்தூர் விலக்கு வரை தேசிய நெடுஞ்சாலை புதி தாக அமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால், இந்தச் சாலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான நிலையில் இருந்து வந்தது. கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக சேத்தூர் பகுதியைச் சுற்றி யுள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறி, பொதுமக்கள் &lsquo;மரணச்சாலை&rsquo; என குறிப்பிடும் அளவுக்கு அபாயகரமான நிலையில் இருந்தது. இந்த நிலையில், சேத்தூர் பகுதியில் &nbsp;சீர்குலைந்துள்ள சாலையை உடனடி யாகச் சீரமைக்க வேண்டும், மேலும் வட்டா ரப் போக்குவரத்து அலுவலகம் முதல் சொக்கநாதன் புத்தூர் விலக்கு வரை புதிய &nbsp;சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக் கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் 31.1.2025 அன்று &nbsp;நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. &nbsp;இந்தப் போராட்டத்தின் எதிரொலி யாக, 3.1.2026 அன்று சேத்தூர் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் சீரமைக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தொடர் அழுத்தம் மற்றும் &nbsp;போராட்டத்தின் காரணமாக சாலை சீர மைக்கப்பட்டதை அப்பகுதி மக்கள் வெகு வாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் முதல் சொக்கநாதன் புத்தூர் விலக்கு வரை புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை தேசிய &nbsp;நெடுஞ்சாலைத் துறை ஆணையம் உட னடியாகத் தொடங்கி, நிரந்தர தீர்வு காண &nbsp;வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.