முந்தய பக்கம்

இருகூரில் 30 ஆண்டுகால சிபிஎம் போராட்டம் வெற்றி!

25 Feb 2026, 3:22 pm
இருகூரில் 30 ஆண்டுகால சிபிஎம் போராட்டம் வெற்றி!
<p><strong>இருகூரில் 30 ஆண்டுகால சிபிஎம் போராட்டம் வெற்றி!</strong></p> <p>கோவை, பிப்.25- இருகூரில் 292 பட்டியலின மற்றும் பழங் குடியின குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளில், மார்க்சிஸ்ட் கட்சியின் 30 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு பயனாளிகள் செவ்வாயன்று குடியேறினர். &nbsp;கோவை, இருகூர் பேரூராட்சியில் நிலமற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 7 ஏக்கர் 29 சென்ட் &nbsp;நிலத்தை கையகப்படுத்த 1994-ல் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக 1996-ல் இழப் பீட்டுத் தொகை வழங்கப்பட்டு, பயனாளிக ளுக்கு பட்டாக்களும் விநியோகிக்கப்பட்டன. பட்டா வழங்கப்பட்ட போதிலும், சில தனிநபர்கள் போலி ஆவணங்கள் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மக்கள் குடியேறுவதை தடுத்து வந்தனர். இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்த நிலத்தை பெற்றுத்தர மக்களுடன் இணைந்து தொடர் போராட்டங்களையும், சட்டப் போராட் டங்களையும் முன்னெடுத்தது. இதைத்தொடர்ந்து, மூன்று தசாப்த கால காத்திருப்புக்குப் பின் 292 &nbsp;குடும்பங்கள் தங்களது வீட்டுமனைகளில் செவ்வாயன்று முறைப்படி குடியேறினர். தங்களது வாழ்நாள் கனவை நனவாக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram