முந்தய பக்கம்

மன்னார்குடியில் சிபிஎம் மண்டல பயிற்சி முகாம் துவக்கம்

12 Dec 2025, 2:40 pm
மன்னார்குடியில் சிபிஎம் மண்டல பயிற்சி முகாம் துவக்கம்
<p><strong>மன்னார்குடியில் சிபிஎம் மண்டல பயிற்சி முகாம் துவக்கம்</strong></p> <p>திருவாரூர், டிச.12- &nbsp;திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம், வடூவூர் சிந்து மகாலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல பயிற்சி முகாம், டிச.12. 13 தேதிகளில் நடைபெறுகிறது. முகாமில் 6 மாவட்டத்தைச் சார்ந்த மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். டிச.12 ஆம் தேதி நடைபெற்ற முதல் நாள் மண்டல பயிற்சி முகாமை சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் முன்னி லையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன் வரவேற்றார். முதல் அமர்வுக்கு தமிழ்நாடு சட்டமன்ற கொறடாவும், மாநிலக் குழு உறுப்பினருமான வி.பி. நாகை மாலி தலைமை வகித்தார். மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி, இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டும். நவபாசிசமும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். 2 ஆவது அமர்வுக்கு, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி ஏகாதிபத்தியமும், சோசலிசமும் (சோசலிசமே மாற்று) என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். 3 ஆவது அமர்வுக்கு நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தலைமை வகித்தார். கட்சி திட்டம் என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் கருத்துரையாற்றினார். மண்டல பயிற்சி முகாமில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் அரியலூர் ஆகிய 6 மாவட்டத்தில் உள்ள மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் வகுப்பு ஆசிரியார்களுக்கு நினைவு பரிசு, புத்தகம் வழங்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram