குடிநீர் குழாய் வால்வு சீரமைப்பு: சிபிஎம் போராட்டம் வாபஸ்
3 Jun 2026, 12:36 am
<p><strong>குடிநீர் குழாய் வால்வு சீரமைப்பு: சிபிஎம் போராட்டம் வாபஸ்</strong> </p><p>சென்னை, ஜூன் 2- சென்னை எர்ணாவூர் பகுதியில் பழுதடைந்த முக்கிய குடிநீர் குழாய் வால்வு உடனடியாகச் சீரமை க்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளது. திருவொற்றியூர் தொகு திக்குட்பட்ட எர்ணாவூர் முருகன் கோயில் நெய்தல் நகர் பகுதியிலிருந்து தான் எர்ணாவூர், எண்ணூர் சுற்றுவட்டாரங்களுக்கு மெட்ரோ குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு கடந்த சில நாட்களாக முக்கிய வால்வு பழுதடைந்து, ஆயிர க்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகச் சாலையில் ஓடியது. இதனால் அப்பகுதி சேறும் சகதியுமாக மாறி மக்கள் அவதிக்குள்ளாகினர். இது குறித்து மெட்ரோ குடிநீர் வாரி யத்திற்குப் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து, ஜூன் 2 அன்று நெய்தல் நகரில் போராட்டம் நடத்தப்படும் என சிபிஎம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாகப் பணியாளர்களை அனுப்பி, பழுதடைந்த வால்வை போர்க்கால அடிப்படையில் முழு மையாகச் சரிசெய்து குடிநீர் வீணாவதைத் தடுத்தனர். பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுவதாகச் சிபிஎம் வடக்கு பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். போராட் டம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே அதிகாரிகள் நட வடிக்கை எடுத்தது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.</p>
