முந்தய பக்கம்

பிபூதிபூர் தொகுதியில்  சிபிஎம் வெற்றி

14 Nov 2025, 1:26 pm
பிபூதிபூர் தொகுதியில்  சிபிஎம் வெற்றி
<p><strong>பிபூதிபூர் தொகுதியில் &nbsp;சிபிஎம் வெற்றி! </strong></p> <p>பாட்னா, நவ. 14 - பீகாரில், ஆளும் பாஜக கூட்டணியின் அனைத்து விதமான தேர்தல் முறைகேடுகளையும் முறியடித்து, பிபூதிபூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வாகை சூடியுள்ளது. இங்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அஜய் &nbsp;குமார், ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றார். 27 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், ஐக்கிய ஜனதாதளம் கட்சி வேட்பாளர் ரவீணா குஷ்வாஹாவை 10 ஆயிரத்து 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அஜய் குமார் 79 ஆயிரத்து 246 வாக்குகளைப் பெற்ற நிலையில், ஐக்கிய ஜனதாதளம் கட்சி வேட்பாளர் ரவீணா குஷ்வாஹா 68 ஆயிரத்து 965 வாக்குகளைப் பெற்றார். சுயேட்சை வேட்பாளர் ரூபாஞ்சலி குமாரி 14 ஆயிரத்து 456 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும், பிபதிபூர் தொகுதியில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சி வேட்பாளர் விஸ்வநாத் சவுத்ரி 13 ஆயிரத்து 450 வாக்குகளையும், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அரவிந்த் குமார் 2 ஆயிரத்து 574 வாக்குகளையும் பெற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram