முந்தய பக்கம்

“தொழிலாளர்களின் கவலைகளை சிபிஎம் முன்னிலைப்படுத்தும்”

7 Mar 2026, 2:36 pm
“தொழிலாளர்களின் கவலைகளை சிபிஎம் முன்னிலைப்படுத்தும்”
<p><strong>&ldquo;தொழிலாளர்களின் கவலைகளை சிபிஎம் முன்னிலைப்படுத்தும்&rdquo; </strong></p> <p>திரிபுரா மாநிலத்தில் மார்ச் 13 அன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. &nbsp;இந்த கூட்டத்திற்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினரும், திரிபுரா எதிர்க்கட்சித் தலைவருமான ஜிதேந்திர சவுத்ரி செய்தியாளர்களிடம் பேசுகை யில்,&ldquo;பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும் தினக்கூலித் தொழிலா ளர்கள், தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் பகுதிநேர ஊழியர்களின் கவலை களை சட்டமன்றத்தில் &nbsp;முன்னிலைப் படுத்த சிபிஎம் முயற்சிக்கும். 2018 சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்பாக, அப்போ தைய முதலமைச்சர் பிப்லப் குமார் தேப், தற்காலிக ஊழியர்கள் என்ற முறையே ஒழிக்கப்பட்டு அனைவரும் பணி வரன்முறை (பணி நிரந்தரம் செய்யும் நடைமுறை) செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அது இன்னும் முழுமையாக நிறை வேற்றப்படவில்லை. அதனால் இது &nbsp;குறித்து விவாதம் நடத்த சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்&rdquo; என அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram